கட்டறு மென்பொருள்
kaṭṭaṟu meṉporuḷ
பொருள்கள் · Senses
1.
இலவசமான மென்பொருள் மட்டுமன்று. கட்டுப்பாடற்ற சுதந்திர மென்பொருளுமாகும். மூலவரைவு உட்பட முழுமையாக இலவசமாக வெளியிடப்படும் மென்பொருள். பயனாளர்கள் அதனை இலவசமாகப் பயன்படுத்துவதுடன், விருப்பப்படி மாற்றியமைக்கலாம். மாற்றியமைத்தபின் மீண்டும் அதனை இலவசமாகவே பிறருக்கு வழங்க வேண்டும். செய்யப்பட்ட மாற்றங்கள் தெளிவாகக் குறிப் பிட்டுக் காட்டப்பட்டிருக்க வேண்டும். மூல ஆசிரியரின் பெயர் அவருடைய பதிப்புரிமைச் செய்தி ஆகியவற்றை மாற்றவோ, நீக்கவோ கூடாது. இலவச மென்பொருளுக்கும் கட்டறு மென்பொருளுக்கும் வேறுபாடு உண்டு. இலவச மென்பொருளை இலவசமாகப் பயன்படுத்தலாம். ஆனால் அதன் மூலவரைவு கிடைக்காது. கிடைத்தாலும் மாற்றியமைக்க முடியாது. ஆனால் கட்டறு மென்பொருள் பொது உரிம ஒப்பந்த முறைப்படி பாதுகாக்கப்பட்டுள்ளது. கட்டறு மென்பொருள் என்னும் கருத்துரு, மாசாசூசட்ஸிலுள்ள கேம்பிரிட் ஜின் கட்டறு மென்பொருள் அமைப்பு (Free Software Foundation) உருவாக்கிய ஒன்றாகும்.
— free software
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/k8w463ke/
தமிழ்“கட்டறு மென்பொருள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/k8w463ke/APA
Oliyon Research. (2026). கட்டறு மென்பொருள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/k8w463ke/MLA
"கட்டறு மென்பொருள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/k8w463ke/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment