செவி நரம்பு
cevi narampu
ஒலியை ஏற்று, மூளைக்குச் செலுத்தும் நத்தை எலும்புப் பிரிவும், சம நிலை உணர்வை இடைகழியிவிருந்து (vestibule) செலுத்தும் இடைகழிப் பிரிவும் இணைந்த உணர்வு நரம்பு, எட்டாம் கபால நரம்பாகும்.
ஒலியை ஏற்று, மூளைக்குச் செலுத்தும் நத்தை எலும்புப் பிரிவும், சம நிலை உணர்வை இடைகழியிவிருந்து (vestibule) செலுத்தும் இடைகழிப் பிரிவும் இணைந்த உணர்வு நரம்பு, எட்டாம் கபால நரம்பாகும். இது செவி எலும்பின் உள் செவித் துளை வழியாக வெளியே வந்து, மூளைத் தண்டின் உள்ளே செல்கிறது.
நத்தை எலும்பு நடுவே சுருள் முடிச்சு (spiral ganglion) உள்ளது. இதில் உள்ள இரு துருவ நரம்புச் செல்களின் உள் துருவப் பகுதி கேட்கும் நரம்பாகிறது. வெளித் துருவப் பகுதி, உள் வெளி மயிர்க் கால் செல்களை அடைகிறது. பிற நரம்பு, நார்கள் சுழன்று, அடிப்படைச் சல்வின் உட்பகுதியை அடைகின்றன.
நரம்பின் வெளி நரம்பு நார் ஒவ்வொன்றிலும், நான்கு மயிர்க் கால்கள் வீதம், ஒரு காதில் 30,000 மயிர்க் கால்கள் உள்ளன. எத்தனை மயிர்க் கால்கள் உள்ளனவோ, அத்தனை நரம்பு நார்களும் இருக்கும். ஒரு மயிர்க் காலுடன், பல நரம்பு நார்களும், ஒரு நரம்பு நார் பல மயிர்க் கால்களுடனும் இணைந்திருக்கும்.
மூளைத் தண்டின் உள்ளே புகுந்ததும், நார்கள் இணைப்புகளாகப் பிரிந்து, மேல், கீழ் நத்தை எலும்பு நியூக்ளியஸ்களில் முடிகின்றன. இங்கிருந்து, மிகு அளவில் நார்கள் குறுக்கே சென்று, எதிர்ப் பக்க நார்களுடன் பிணைந்து விடுகின்றன. பின்னர், நார்கள் மூளையின் கேட்கும் பகுதியான மேல் பொட்டுப் (temporal) புடைப்பில் சேர்கின்றன.
சம நிலை உணர்த்தும் இடைகழிப் பிரிவிலும் இரு துருவச் செல்கள் உள்ளன. இடைகழி முடிச்சில் உள் செவித் துளைகள் உள்ளன. முடிச்சின் மேல் பகுதியிலிருந்து நரம்பு நார்கள், மேல் இடைகழி நரம்பு, யுட்ரிக்கிள், மேல் கிடை மட்ட அரை வட்டக் குழல்களுக்குச் செல்கின்றன. முடிச்சின் கீழ்ப் பகுதியிலிருந்து இடைகழி நரம்பு வழியாக நார்கள் சில அரை வட்டக் குழல்களுக்குச் செல்கின்றன. இவை வெளி, மேல், உள் நியூக்ளியஸ்களில் முடிகின்றன. —டி. எம். பரமேஸ்வரன்
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 10, பக். 907)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/k6zwk77h/
தமிழ்“செவி நரம்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/k6zwk77h/APA
Oliyon Research. (2026). செவி நரம்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/k6zwk77h/MLA
"செவி நரம்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/k6zwk77h/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment