இந்திய வானவெளி முயற்சிகள்
intiya vāṉaveḷi muyaṟcikaḷ
பொருள்கள் · Senses
1.
1962இல் இந்தியத் தேசிய வானவெளி ஆராய்ச்சிக் குழு அமைக்கப் பட்டது. 1963இல் தும்பா ஏவுகணை நிலையம் நிறுவப் பட்டது. 1965இல் வானவெளி அறிவியல் மையமும் தொழில் துணுக்க மையமும் உருவாக்கப் பட்டன. 1967இல் செயற்கை நிலாக்களிலிருந்து செய்திகள் பெற அகமதாபாத்தில் புவி நிலையம் ஏற்படுத்தப்பட்டது. 1968இல் தும்பா ஏவுகணை நிலையம் பன்னாட்டுக் கழகத் திற்கு உரிமையாக்கப்பட்டது. 1972-76 வரை காற்று மேல்வெளி ஆராய்ச்சிக்காகப் பல ஏவு கனைகள் விடப்பட்டன. 1975 லிருந்து ஆரியபட்டா முதலிய செயற்கை திலாக்கள் ஏவும் முயற்சிகள் வெற்றி தரும் வகையில தொடங்கின. 1984ல் இந்திய உருசியக் கூட்டுத் திட்டத்தில் ரகேஷ் சர்மா இரு உருசிய வானவெளி வீரர்களுடன் வான வெளிக்குச் சென்று நலமுடன் திரும்பினார். இவர் முதல் இந்திய வானவெளி வீரர் இந்தியா மக்கள் நெருக்கம் அதிகமுள்ள நாடு. செய்தித் தொடர்பு, வானிலையறிதல், கனிவளம் அறிதல் முதலியவை வளர்ச்சி பெறவில்லை. இவற்றை வளர்க்கவே இன்சட் பயன்படுகிறது. 1962-1992 வரை 31 ஆண்டுகளில் இந்தியா தன் பொருள் வசதி, தொழில் நுணுக்க வசதி ஆகிய வற்றிற்கேற்ப நடத்தி வந்த வான வெளி ஆராய்ச்சி பெரும் பயனைத் தந்துள்ளது என்று கூறலாம். அமெரிக்கா, உருசியா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நான்கு நாடுகளுக்கு அடுத்ததாக ஐந்தாவது நாடாக இந்தியா தன்னை வானவெளி ஆராய்ச்சியில் வெளிப்படுத்தியுள்ளது. (வா.அறி) பா. future Indian satellites.
— Indian space efforts
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/k69nvhpp/
தமிழ்“இந்திய வானவெளி முயற்சிகள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/k69nvhpp/APA
Oliyon Research. (2026). இந்திய வானவெளி முயற்சிகள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/k69nvhpp/MLA
"இந்திய வானவெளி முயற்சிகள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/k69nvhpp/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment