இன்பம்தான் வாழ்வின் குறிக்கோள் என வலியுறுத்துகிறது. இம்பநிலைக் கொள்கை (Hedonism) தன்னல இன்பநிலைக் கொள்கை (Egoistic Hedonism) புதிய இன்பநிலைக் கொள்கை (Modern Hedonism), பயன்பாட்டு இன்பநிலைக் கொள்கை (Utilitarian Hedonism) என மூவகைப்படும். தனது நல்வாழ்விற்கும் முன்னேற்றத்திற்கும் செயலாற்றுவதே இன்பம் எனத் தன்னல இன்பநிலைக் கொள்கை கூறுகிறது. ஆனால், புதிய இன்பநிலைக் கொள்கை பிறர் நலம் பேணுதலாகிய தொண்டாற்றுவதன் மூலமே உண்மையான உயர்ந்த இன்பத்தைப் பெறுதலியலும் எனக் கூறுகிறது. பயன்பாட்டு இன்பநிலைக் கொள்கையின்படி நற்செயல்களே மிகுதியான இன்பத்தைப் பெரும்பான்மையான மக்களுக்கு அளிக்கவல்லன. பண்டைக் கிரேக்கத்தில் ‘எப்பிகியூரசியம்’ (Epicurcanism), ‘சிரீனிசியம்’ (Cyrenaicism) என்னும் இரு வகை இன்பநிலைக் கோட்பாடுகள் வழங்கின. ‘எப்பிகியூரசியம்’, உடலால் பெறுகிற இன்பத்திலும் மனத்தால் பெறுகிற இன்பமே சிறந்தது எனக் கூறுகிறது இக்கோட்பாடு இன்பத்திற்குப்பின் துன்பம் உண்டு என்பதன் அடிப்படையில் இன்பத்திற்கு விளக்கம் தருகிறது. ஆனால், சிரீனிசியம் எதிர்விளைவுகளை நோக்காமல் செய்யும் செயலால் பெறும் இன்பமே சாலச் சிறந்தது எனக் கூறுகிறது.