சிபீஎஸ்
cipīes
பொருள்கள் · Senses
1.
உரையாடல் நிரலாக்க முறைமை எனப் பொருள்படும் Conversation Programming System soil 13, 331 குறும்பெயர். இது ஒரு கணினி அமைப்பு. இதில் உள்ளீடு, வெளியீடுகளை தொலைவிலுள்ள ஒரு முனையம் கையாள்கிறது. நேரப்பங்கீட்டினைக் கடைப்பிடிப்பதால், பயனாளர் உடனடியாக பதில் பெறுவது போலவே தோற்றமளிக்கும். நிரலாக்க மொழியின் துணைத் தொகுதி எனலாம். ஐபிஎம்மால் உருவாக்கப்பட்டது. CPSR ; சிபீஎஸ்ஆர் : சமூக பொறுப்புணர்வுமிக்க கணினி இயலாளர் எனப் பொருள்படும் Computer Professionals for Social Responsability என்ற தொடரின் தலைப்பெழுத்துக் சமூகப் குறும்பெயர். கணினித் தொழில் நுட்பம் இராணுவத் தேவை களுக்குப் பயன்படுத்தப்படுவதை எதிர்த்து உருவாக்கப் பட்ட ஒரு பொதுநல அமைப்பு. மனித சமூகத்தின் வாழ்வியல் உரிமைகள் மற்றும் தொழிலாளர்களின்மீது கணினிகளின் தாக்கம் போன்ற பிரச்சினைகளில் இவ்வமைப்பு நாட்டம் செலுத்துகிறது. CPU சி. பீ. யு மைய செயலகம் எனப் பொருள்படும் Central Processing Unit என்பதன் பெயர். CPU cache : சி. பீ. யு இடை மாற்றகம் : மையச் செயலகத்தையும் முதன்மை நினைவகத்தையும் இணைக்கும் விரைவு நினைவகத்தின் ஒரு பகுதி. சி. பீ. யூ வுக்குத் தேவையான அதாவது சி. பீ. யூ அடுத்துக் கையாளவிருக்கும் தரவு மற்றும் நிறை வேற்றவிருக்கும் ஆணைகளையும் இந்த நினைவகப் பகுதி தற்காலிகமாகக் கொண்டிருக் கும். நினைவகத்துடன் ஒப்பிடுகையில் சி. பீ. யூ இடைமாற்று நினைவகம் அதிக இதிலுள்ள தரவு, தொகுதி தொகுதியாகப் பரிமாறப்படுவதால் செயல்பாட்டு வேகம் அதிகரிக்கிறது. சிபியூவுக்கு அடுத்துத் தேவைப் படும் தரவு எதுவென்பதை சில படிநிலைத் தருக்க முறையில் இயக்க முறைமை தீர்மானிக்கிறது. இது, இடை மாற்று நினைவகம் (cache memory) என்றும் நினைவக இடை மாற்று (memory cache) என்றும் அழைக்கப்படும். CPU cycle : திடீர் சூழ்ச்சி 1. மையச் செயலகம் உணர்ந்து கொள்ளுமளவுக்கான மிகச்சிறிய நேர அலகு ஒரு வினாடியில் சில பத்துக் கோடியில் ஒரு பகுதியைக் குறிக்கும். 2. ஒரு பதிவகத்தின் (register) உள்ளடக் கத்தைக் கொணர்தல் போன்ற மிக எளிய ஆணைகளை நிறைவேற்ற அல்லது செயல் பாடில்லா (Non-Operation-No) ஆணையை நிறைவேற்ற சி. பீ. யூ எடுத்துக் கொள்ளும் நேரம். CPU fan : சிபீயூ விசிறி மையச் செயலகத்தின்மீது அல்லது சிபியூவின் வெப்பக்கவர்வி மீது பொருத்தப்படும் ஒரு மின்சார விசிறி. சி. பீ. யூவைச் சுற்றிக் காற்றைச் கழலச் செய்து வெப்பத்தைத் தணிக்க உதவுகிறது. CPU speed : சிபீயூ வேகம் : ஒரு குறிப்பிட்ட மையச் செயலகத்தின் தரவு செயலாக்கத் திறனின் ஒப்பீட்டு அளவுகோல். பெரும்பாலும் மெகாஹெர்ட்ஸில் அளக்கப்படும். CPU time : சி. பீ. யு நேரம் : நிரலின் ஆணைகளைச் செயல் படுத்துவதற்காக மையச் செயலகம் எடுத்துக் கொள்ளும் நேரம். . cr : . சிஆர் : ஒர் இணைய தள ரீக்கா நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர். cracker தகர்ப்பர்; உடைப்பவர் : ஒரு கணினி அமைப்பின் பாதுகாப்பு ஏற்பாடுகளை உடைத்து அத்துமீறி நுழையும் நபர். ஒரு கணினி அமைப்பிலிருந்து சட்டத்துக்குப் புறம்பாக தகவலைப் பெறுதல் அல்லது கணினி வளங்களைப் பெறுதல். இதுவே சில தகர்ப்பர்களின் நோக்கமாக இருக்கின்றது. ஆனால், அமைப்பின் பாதுகாப்பை வெற்றிகரமாக உடைத்து உள்நுழைவது மட்டுமே பெரும்பாலான தகர்ப்பர் களின் மைய நோக்கமாய் உள்ளது. crash : வீழ்ச்சி மென்பொருள் தவறு அல்லது வன்பொருள் செயல் கோ ளாறினால் கணினி அமைப்பு இயங்காமல் நின்று போவது. crash recovery : முறிவு மீட்சி : ஒரு கணினியில் நிலை வட்டு பழுதடைவது போன்ற ஒரு பேரழிவுப் பழுதுக்குப்பின் மீண்டும் செயல்பாட்டைத் தொடங்க அக்கணினிக்கு இருக்கும் திறனை இவ்வாறு குறிப்பிடலாம். பெரும்பாலும், தகவலுக்கு எவ்வித இழப்பும் இல்லாமல் மீட்கப்பட முடியும். சிலவேளைகளில், முழுவதுமாக இல்லாவிட்டாலும் சிறி தளவு தரவு இழக்கப் படுவதுண்டு. cray , கிரே கிரே ரிசர்ச் நிறுவனம் உருவாக்கிய மீத்திறன் (சூப்பர்) கணினிகளின் வரிசை. கிரே-1 ஒரு நொடியில் 80 கோடி நிரல்களைச் செயல்படுத்தும். பத்து இலட்சம் எழுத்துகளை சேமித்து வைக்கும். கிரே-2 ஒரு நொடியில் நூறு கோடி செயல் பாடுகளை நிகழ்த்தவல்லது. Cray Seymour : கிரே செய்மோர் : 1980 முதல் மீத்திறன் கணினியான கிரே 1-ஐயும் பின்னர் ஐந்து ஆண்டுகள் கழித்து கிரே -2 மீத்திறன் கணினியையும் வடிவமைத்து அறிமுகப்படுத்தியவர். CRC சிஆர்சி : சுழல்மிகைச் சரி பார்ப்பு எனப் பொருள்படும் Cyclic Redundancy Check என்பதன் குறும்பெயர். தரவுகளை அனுப்புவதில் ஏற்படும் பிழைகளைச் சோதிக்க இந்த முறை கடைபிடிக்கப்படுகிறது. create உருவாக்கு : 1. இருக்கின்ற கோப்பை மாற்றுவதற்குப் பதிலாக புதிய கோப்பை வட்டின்மீது உருவாக்குதல். 2. தரவுத் தளத் தொகுப்புகளில் ஒர் அட்டவணையை வடிவமைக்கும் பொருட்டு அதில் இடம் பெறும் புலங்களின் பெயர், நீளம், தரவினம் போன்றவற்றை வரையறுக்கும் கட்டளை. பதிலாக creating : உருவாக்குதல். creation : உருவாக்கல் : தோற்றுவிப்பு. creative designer : படைப்புத் திறன் வடிவமைப்பாளர் : கணினிப் பதிப்புத் துறையில் (டி. டீ பீ) பக்கங்களை வெளியமைப்பு செய்து வடிவமைக்கும் நபர். creativity படைப்பாக்கம் : படைப்புத் திறன். creator - கிரியேட்டர் : ஆப்பிள் மெக்கின்டோஷில் உள்ள ஒரு நிரல். ஒர் ஆவணத்தை உருவாக் கும்போது அதற்கும் அதை உரு வாக்கிய பயன்பாட்டுத் தொகுப் புக்கும் இடையே ஒரு தொடுப் பினை உருவாக்கும் நிரல் இது. ஒரு ஆவணத்தைத் திறக்கும்போது, இயக்க முறைமையானது அந்த ஆவணம் உருவாக்கப்பட்ட பயன்பாட்டுத் தொகுப்பை அடையாளம் கண்டு திறக்க இத் தொகுப்புப் பயன்படுகிறது. credit card number : பற்று அட்டை எண் : பணப் பொறுப்பு அட்டை எண். creeping : ஊர்தல் திரையின் குறுக்காக சொற்கள் நகர்ந்து செல்லல். creeping featurism : படரும் சிறப்புக் கூற்றியல் : ஒரு மென் பொருள் தொகுப்பின் புதிய பதிப்பில் அதனை உருவாக்கி யவர் மேலும் மேலும் புதிய சிறப்புக் கூறுகளை சேர்த்துக் கொண்டே செல்லும் முறை. அத்தொகுப்பு மிகப் பெரிதாகி, பயன்படுத்த முடியாத அளவுக்குப் பெரிதாகி விடாமல் இந்த முன் னேற்றங்களைச் செய்வர். சந்தை யில் இதே போன்ற பிற மென் பொருள் தயாரிப்புகளுடன் போட்டியிடப் புதிய பதிப் பி வெளியிடும்போது, மேலும் புதிய சிறப்புக் கூறு களைச் சேர்த்து அதன் செய் திறனை மேம்படுத்த முயலும் போது இவ்வாறு நிகழ்கிறது. cricket presents : கிரிக்கெட் வழங்கும் . கம்ப்யூட்டர் அசோசியேட்ஸ் நிறுவனத்தின் மெக்கின் டோஷ-க்கான டி. டி. பி மென் பொருள். திரைப்பட பதிவுகள், துண்டறிக்கைகள், ஒட்டுமொத்த செலவு போன்ற வெளியீடுகள் உருவாக்குவதற்கான திறனை இது அளிக்கிறது. cricket stylist கிரிக்கெட் ஸ்டைலிஸ்ட் : ஆப்பிள் மெக் கின்டோஷ் கணினிக்கான புகழ் பெற்ற பொருள்நோக்கு படம் வரையும் மென்பொருள். கோடுகள் செவ்வகம் மற்றும் நீள் வட்ட கருவிகளைப் பயன்படுத்தி கிரிக்கெட் ஸ்டைலிஸ்ட் மூலம் ஒவியங்களை உருவாக்கும். cripped version : சுருக்க பதிப்பு : ஒரு வன்பொருள் அல்லது மென்பொருள் தயாரிப்பின் முன்னோட்டப் பதிப்பு. சுருங்கி வடிவில் இருக்கும். குறைந்த வசதிகளைக் கொண்டதாக இருக்கும். சில கட்டுப்பாடுகளுடன் உரு வாக்கப்படும் செயல்விளக்க மென்பொருள். சான்றாக, 50 பதி வேடுகளை மட்டும் நுழைக்க அனுமதிக்கும் தரவுத் தளத் தொகுப்பைக் குறிப்பிடலாம். criteria range : வரன்முறை எல்லை பதிவேடுகளைத் தேர்வு செய்வதற்கான நிபந்தனைகள். critical error : உயிர்நாடி பிழை நெருக்கடிப் பிழை , கணினியின் செயலாக்கத்தையே இடை நிறுத்தம் செய்துவிடும் பிழை. ஒரு மென்பொருள் மூல மாகவோ, பயனாளரின் தலை பீட்டினாலோதான் அப் பிழை யைச் சரிசெய்ய முடியும். (எ-டு) இல்லாத ஒரு வட்டிலிருந்து படிக்க முயல்தல், அச்சுப்பொறி யில் தாள் தீர்ந்துபோகும் நிலை, தரவுச் செய்தி அனுப்புகையில் சரிபார்ப்புத் தொகை (checksum) யில் ஏற்படும் பிழை. இன்ன பிற. கீட்டு ஆணைகளில் ஒன்று. சாதனத்தில் முக்கிய பிழை ஏற்பட்டால் இதைப் பயன்படுத் துவர். பிழையிலிருந்து மீண்டெழும் நிரல்கூறை இதற்குப் பதிலாக பயன்படுத்தலாம். critical path : முக்கிய பாதை : ஒரு பெரிய திட்டத்தை ஒழுங்கு படுத்தப்பட்ட தொடர்பகுதி பிரிக்கும் முறை. முந்தைய இயக்கத்தை ஒட்டியே ஒவ்வொரு நிலையும் அமையும். கால அளவுகளைப் பற்றிய மதிப்பீடுகளைச் செய்ய முடியும். மட்டுமே தொடர்புள்ளது என்று சொல்ல முடியாவிட்டாலும் முக்கிய பாதை ஆய்வுமுறை ஏராளமான கணக்கீடுகளைக் கொண்டது. கணினி மூலமே இதை எளிதில் செய்ய முடியும். முக்கியப் பாதை முறை (சிபிஎம்) திட்டம் நிறை வேற்றப்படுவதற்குத் தேவையான ஒவ்வொரு முக்கிய நிரல் களையும ஆராயந்து செய்வதை உள்ளடக்கிய பேரளவு நீண்டகாலத் திட்டங்களைக் கட்டுப்படுத்தும் மேலாண்மை தொழில் நுட்பம். critical region : முக்கிய மண்டலம் : ஒரே நேரத்தில் (பல் செயலாக்க முறையில்) ஒன்றுக்கு மேற்பட்ட செயல் முறையில் இயக்க முடியாத ஆணைகளின் தொகுப்பு. களது முயற்சியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக நிர்வாகிகள் கருதும் சிறிய எண்ணிக்கையிலான முக்கிய காரணிகள். இவற்றில் வெற்றி பெற்றால் அவர்களது இலக்குகளை அடைவதுடன் நிறுவனத்தின் வெற் றிக்கும் உறுதியளிக்கலாம். CRJE சிஆர்ஜேஇ உரையாடல் முறை சேய்மைப் பணி பதிவு என்று பொருள்படும் Conversational Remote Job Entry என்பதன் குறும்பெயர். உரையாடல் முறை மொழியைப் பயன்படுத்தி தொலை தூரத்தில் முனையத்தில் பணி யாற்றும் ஒருவர் தன்னுடைய பதிவுகளை இடம் ஒன்றுக்கு அனுப்ப, தொலை தூர மைய நிலையத்தில் அதைச் செயலாக்கம் செய்தல். CROM : க்ரோம் : Control ROM என்பதன் குறும்பெயர். பெரும்பாலான மையச் செயலகச் சிப்புகளுடன் ஒருங்கிணைந்த பகுதி. மையச் செயலக சிறு ஆணைகளை ஒரு வரிசையாகச் சேர்ந்த கூட்டு மெருகு ஆணைகளாக மாற்றி சேமிக்கும் இடம். கணினியைப் பயன்படுத்துவோருக்கு கூட்டியின் மூலம் கிடைக்கும் பெருக்கு அல்லது பிரி போன்றவை பெரு ஆணைகளில் அடங்கும். crop : க்ராப் : கணினி வரை கலையில் ஒரு படத்தின் சில பகுதிகளை வெட்டுதல். crop marks, : க்ராப் அடையாளங்கள் : வடிவத்தை விரும்⅝பும் அளவில் வெட்டுவதற்குப் பயன்படுகின்ற, காகிதத்தில் உள்ள அச்சிடப்பட்ட கோடுகள். cross assembler : குறுக்கு சில்லுமொழி மாற்றி : ஒரு கணினிக்காக நிரல்களை மொழி பெயர்ப்பதற்கு இன்னொரு கணினியில் இயங்கும் சில்லு மொழி மாற்றி. cross check : குறுக்கு சரி பார்ப்பு : இரண்டு மாறுபட்ட முறைகளின் மூலம் கணிப் பினை சோதனை செய்தல். cross compiler குறுக்கு மொழிமாற்றி குறிப்பிட்டு தொகுப்பதற்காக வடிவமைக்கப்பட்டது அல்லாத வேறு ஒரு கணினியில் செயல்படும் மொழிமாற்றி. cross compiling/assembling : குறுக்கு மொழிமாற்றல்/சில்லு மொழிமாற்றல் : சிறு கணினி, பெருமுகக் கணினி அல்லது நேரப் பங்கீட்டு சேவையைப் பயன்படுத்தி நுண் கணினிகளில் பின்னர் பயன்படுத்துவதற்காக நிரல்களை எழுதி பிழைதிருத்தல். cross development : குறுக்கு உருவாக்கம்; மாற்று உருவாக்கம் : ஒரு குறிப்பிட்ட முறைமையைப் பயன்படுத்தி முற்றிலும் வேறுவகையான ஒரு முறைமைக்கான நிரல்களை உருவாக்குதல். இலக்கு முறைமையைக் காட்டிலும் உருவாக்கு முறைமையின் உருவாக்கக் கருவிகள் உயர்தரமானதாக இருப்பின் இது இயலும். cross foot : குறுக்குக் கால்; குறுக்குச் சரிபார்ப்பு ஒரு கூட்டுத் தொகையின் துல்லியத் தன்மையை சரிபார்க்கும் முறை. ஒரு கணக்குப் பதிவேட்டில் ஒரு கூட்டுத் தொகையைச் சரிபார்க்க அக்கூட்டலில் இடம் பெறும் நெடுவரிசை மற்றும் கிடை வரிசைகளின் கூட்டுத் தொகையைச் சரி பார்ப்பதைப் போன்றது. cross footing check : குறுக்கும் நெடுக்கும் சரிபார்ப்பு : குறுக்காக சேர்த்து அல்லது கழித்து சுழி (பூஜ்யம்) யாக்கி முடிவு களைக காணும முறை. cross functional information systems : குறுக்குச் செயல் பாட்டு தரவு அமைப்புகள் வணிகச் செயலாற்றமும் தரவு அமைப்புகளும் ஒருங்கிணைந்த தரவு அமைப்புகள். இதன் மூலம் ஒரு நிறுவனத்தின், பிற செயல் உறவுகளின் தரவுகளை பங்ககிட்டுக் கொள்ள முடியும். cross hairs : குறுக்கு முடிகள் : ஒரு உள்ளிட்டுச் சாதனத்தில் ஒன்று செங்குத்தாகவும், ஒன்று கிடைமட்டமாகவும் உள்ள இரண்டு கோடுகள். இவற்றின் குறுக்கு வெட்டு அடையாளமானது வரை கபடமறை அமைப்பில் காட்டியின் இடத்தைக் குறிப்பிடுகிறது. cross hatch . குறுக்கு கோடு : ஒரு ஒவியத்தின் பகுதிகளைச் குறுக்கு பிரித்து, ஒவ்வொரு பகுதியையும் வேறுபடுத்திக் காட்டுதல். cross hatching : குறுக்குப் பின்னலிடல் ஒரு வருகைப் படத்தின் பரப்பை நிரப்புவதற்க்குஹ பயன்படுத்தப்படும் பல வழிமுறைகளில் இதுவும் ஒன்று. ஒன்றுக்கொன்று வெட்டிக் கொள்ளும் நிலை யான இடை கோடுகளினால் ஆன நிழலிடு முறை. cross - linked files ; குறுக்குத் தடுப்புக் கோப்பு : மாற்றித் தொடுக்கப்பட்ட கோப்புகள் : எம்எஸ் டாஸ், விண்டோஸ் 3. x, விண்டோஸ் 95 ஆகியவற்றில் ஏற்படும் கோப்புச் சேமிப்புப் பிழை. ஒரு நிலை வட்டு அல்லது நெகிழ்வட்டிலுள்ள ஒன்று அல்லது மேற்பட்ட வட்டுப் பிரிவு அல்லது கொத்துப் பகுதி, கோப்பு ஒதுக்கீட்டு அட்டவணையில் ஒன்றுக்கு மேற்பட்ட கோப்புகளுக்கு ஏற்படுவது. காணாமல் போன கொத்துகளைப்போலவே மாற்றித் தொடுக்கப்பட்ட கோப்பு களினாலும் ஒரு பயன்பாட்டுத் தொகுப்பு இயங்கிக் கொண்டிருக்கும்போதே நட்ட நடுவில் நின்று போகும்.
— CPS
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/jvcfews7/
தமிழ்“சிபீஎஸ்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jvcfews7/APA
Oliyon Research. (2026). சிபீஎஸ். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/jvcfews7/MLA
"சிபீஎஸ்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jvcfews7/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment