ஆல்காட், ஹென்ரி ஸ்டீல்
ālkāṭ, heṉri sṭīl
(1832-1907) அமெரிக்க அறிஞர்.
(1832-1907) அமெரிக்க அறிஞர். பல்கலைக் கழகப் படிப்பு முடிந்ததும் விவசாயியாக இருந்தார். அமெரிக்க உள்நாட்டுப் போர்க் காலத்தில் போர்வீரராக இருந்து கர்னல் பதவி பெற்றார். அதன் பின் சட்டம் பயின்று வழக்கறிஞராக வேலை பார்த்தார். 1875-ல் பிளவட்ஸ்கி அம்மையாருடன் சேர்ந்து பிரமஞான சபையை நிறுவி, அதன் முதல் தலைவராக இருந்து, அச்சங்கம் உயர்ந்த நிலை எய்துமாறு உழைத்தார். சிறந்த நாவலர். பிரமஞானம் பற்றி நூல்கள் இயற்றியுள்ளார். பௌத்த மதத்தில் மிகுந்த பற்றுடையவர். ஹரிஜனங்களுக்காகப் பல பாடசாலைகள் நிறுவி உதவினார். மக்கள் இனத்துக்குச் சேவை செய்த பெரியார்களுள் ஒருவர்.
மூலம் · source: கலைக்களஞ்சியம் (தமிழ் வளர்ச்சிக் கழகம்) — CC BY-SA 3.0 (தொகுதி 1, பக். 477)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/jqz9wmu6/
தமிழ்“ஆல்காட், ஹென்ரி ஸ்டீல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jqz9wmu6/APA
Oliyon Research. (2026). ஆல்காட், ஹென்ரி ஸ்டீல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/jqz9wmu6/MLA
"ஆல்காட், ஹென்ரி ஸ்டீல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jqz9wmu6/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment