உபவேதம்
upavētam
இருக்கு, எகர், சாமம், அதர்வணம் என்னும் நான்கும் தலையாய முதல் நூல்களாய் இருத்தலின் அவை நூல்வேதம் எனப்பட்டன.
இருக்கு, எகர், சாமம், அதர்வணம் என்னும் நான்கும் தலையாய முதல் நூல்களாய் இருத்தலின் அவை நூல்வேதம் எனப்பட்டன. அவற்றை அடுத்து அவற்றிற்குத் துணையாகத் தோன்றிய நால்வகை நூல்கள் ‘உபவேதம்’ எனப்படுகின்றன. அவை ஆயுர் வேதம், தனுர் வேதம், காந்தர்வ வேதம், அருத்த வேதம் எனப்படும்.
ஆயுர்வேதம்
மருத்துவ நூல். மூல வேதத்தில் சொல்லப்பட்டட கருமங்களைச் செய்து பயன் பெறுதற்கு நல்லுடல் இன்றி இயலாது. ஆதலின் ஆயுர்வேதம் அந்த உடல் நலனைப்பற்றிக் கூறுகிறது. இது ஓர் உபவேதமாகச் சொல்லப்படுகின்றது.
தனுர்வேதம்
இது வில்லைப் பற்றிய வேதமாகும். ‘வில்’ எனக் கூறிய போதிலும் இது அனைத்துப் படைக்கலங்களையுமே குறித்து நிற்கின்றது. ஆகவே படைக்கலம் பயிலும் முறையைக் கூறுவதே தனுர் வேதமாம். நல்லுடல் இருப்பினும் அது பகைவரால் நலியப்படுதலைத் தவிர்க்க இவ்வில் வேதம் துணை செய்கிறது. ஆதலின் இதுவும் ஓர் உபவேதமாயிற்று.
காந்தர்வ வேதம்
இசை நூல், ‘இசையொடு சிவணிய நரம்பின் மறை’ எனத் தொல்காப்பியரும் கூறினார். (தொல். எழுத்து: நூல்மரபு, 33). கடவுளர் வழிபாட்டில் முதன்மையான இடத்தைப் பெறுவது சாத்திர முறைப்படி அமைந்த இசையோடு கூடிய துதிப்பாடல்களே. அத்தகைய இசைகளைக் கடவுளர் மிகவும் விரும்புகின்றனர். அதனால், அவ்விசையைத் தெரிவிக்கின்ற நூல் ஓர் உபவேதமாயிற்று.
அருத்த சாத்திரம்
பொருள் நூல், அதாவது பொருளை ஈட்டுமாறும், காக்குமாறும், வகைப்படுத்திச் செலவு செய்யுமாறும், பயன் துய்க்குமாறும் போல்வனவற்றை உணர்த்தும் நூல். பொருளானே இம்மை மறுமைப் பயன்களை அடைதல் கூடும். ஆதலின், அதனைக் கூறும் நூல் இம்மை மறுமை பற்றிக் கூறும் வேதங்களோடு ஒப்ப வேதமாயிற்று. சி.அ.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 924)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/jqz5aaaa/
தமிழ்“உபவேதம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/jqz5aaaa/APA
Oliyon Research. (2026). உபவேதம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/jqz5aaaa/MLA
"உபவேதம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/jqz5aaaa/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment