இலேலாந்து, சான்
ilēlāntu, cāṉ
இங்கிலாந்து நாட்டின் தொல்பொருள்களைச் சேகரித்த அறிஞர்.
இங்கிலாந்து நாட்டின் தொல்பொருள்களைச் சேகரித்த அறிஞர். இவர் இலண்டனில் 1506–ஆம் ஆண்டு பிறந்தார். இங்குள்ள புனிதபவுல் பள்ளியில் கல்வி கற்றபின், கேம்பிரிட்சு, ஆக்சுபோர்டு, பாரிசுப் பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்றார். இங்கிலாந்து அரசர் எட்டாம் என்றியின் நூலகக் காப்பாளராக இலேலாந்து (Leland John) அமர்த்தப்பட்டார். இவர் அரசக் குடும்பத்தின் சமயக் குருவாகவும் விளங்கினார்; கி.பி. 1533–இல் அரசரின் தொல்பொருள் ஆராய்ச்சியாளராக நியமிக்கப்பட்டார். இங்கிலாந்து முழுவதும் சுற்றித் தொல்பொருள்களையும் பல்லேறு ஆவணங்களையும் சேகரித்தார். தாம் சேகரித்த தொல்பொருள்கள், ஆவணங்கள் பற்றி ஆய்வுரை ஒன்றினை 1545–இல் வெளியிட்டார். இது இங்கிலாந்தின் தொல்பொருள்களையும் ஆவணங்களையும் அறிந்துகொள்ளப் பேருதவியாய் இருந்தது. இலேலாந்து, ‘ஆர்தூரியன் மரபுகளின்’ (Arthurian legends) வரலாற்றுச் சிறப்பினை வெளிப்படுத்தியதால், அவற்றின் பாதுகாவலர் எனச் சிறப்பித்துக் கூறப்படுகிறார். இவர் கி.பி. 1550–இல் பைத்தியம் பிடித்து 1552–ஆம் ஆண்டு ஏப்பிரல் 18–ஆம் நாள் இலண்டனில் காலமானார்.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 452)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/jp3bxueq/
தமிழ்“இலேலாந்து, சான்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/jp3bxueq/APA
Oliyon Research. (2026). இலேலாந்து, சான். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/jp3bxueq/MLA
"இலேலாந்து, சான்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/jp3bxueq/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment