வேறுபட்ட மின் முனைகளை இணைக்கும் போது, பொதுவாக இரு வகை மின் கலங்கள் (cells) கிடைக்கின்றன. இவை வேதிக் கலங்கள் (chemical cells), செறிவுக் கலங்கள் (concentration cells) என்று வகைப் படுத்தப் படுகின்றன. வேதிக் கலத்தின் மின் இயக்க விசைக்குக் (electromotive force) காரணம், மின் கலத்தில் நிகழும் வேதி வினை ஆகும். செறிவுக் காலத்தில், பொருள் (matter) ஒரு பகுதியினின்றும், மறு பகுதிக்கு மாற்றப் படுகிறது. இம்மாற்றத்தால், கட்டின்மை ஆற்றலில் (free energy) குறைவு ஏற்படுகிறது. இக்கட்டின்மை ஆற்றல் குறைவால், செறிவுக் கலத்தில் மின்னியக்க விசை ஏற்படுகிறது. மேலும், இவ்விரு வகைக் கலங்கள் ஒவ்வொன்றிலும் ஒரு நீர்மச் சந்திப்பு (liquid function) இருக்கக் கூடும். அதாவது, கலம் அயனிப் பெயர்ச்சியுடன் கூடியதாகவோ, அற்றதாகவோ இருக்கலாம். இதன் அடிப்படையில், மின் வேதிக்கலங்களைப் பின் வருமாறு வகைப் படுத்தலாம்: செறிவுக் கலன்களின் மின்னியக்க விசை (emf), இரு மின் முனைகளுக்கு இடையே உள்ள செறிவைப் பொறுத்து அமைகிறது. இரு மின் முனைகளுக்கு இடையில் உள்ள செறிவு வேறுபட்டால், பொருள் ஒரு மின் முனையிலிருந்து, மற்றொரு மின் முனைக்கு மாற்றப் படுகிறது. ஒரே விதமான இரண்டு மின் முனைகள், ஒரே கரைசலில் வைக்கப் பட்டிருப்பினும், வெவ்வேறு செறிவுகளைப் பெற்றிருக்கக் கூடும். காட்டாக, கீழ்க் காணும் செறிவுக் கலத்தில் H_2 \big( P_1 \big) | H\oplus | H_2 \big( P_2 \big) இரண்டு ஹைட்ரஜன் மின் முனைகள், P₁, P₂ என்ற வெவ்வேறு அழுத்தங்களில், ஒரே ஹைட்ரஜன் அயனிக் கரைசலில் வைக்கப் பட்டுள்ளன. இக்கலத்தின் மின்னியக்க விசை, இரண்டு ஹைட்ரஜன் மின் முனைகளின் அழுத்த வேறுபாட்டால் விளைகிறது. இவ்வாறே, இரு வேறு செறிவுள்ள ரசக் கலவை மின் முனைகள், (amalgam electrodes) உலோக அயனிகளைக் கொண்ட கரைசலில் வைக்கப் படும் போது, மின்னியக்க விசை ஏற்படுகிறது. காட்டாக, Cd \big( Hg \big)C_1 | Cd^{2+} கரைசல் Cd \big( Hg \big) | C_2 என்ற செறிவுக் கலத்தில் C₁, C₂ என்ற இரு வேறு செறிவுகளைக் கொண்ட கேட்மியம் ரசக் கலவைகள் [Cd(Hg)]₂ கேட்மியம் அயனிகளைக் (Cd²+) கொண்ட கரைசலில் வைக்கப் படுகின்றன. இச்செறிவு கலத்தின் மின்னியக்க விசை, ரசக் கலவைகளிலுள்ள கேட்மியம் உலோகத்தின் செறிவு வேறுபாட்டால் ஏற்படுகிறது. மேற்கூறிய ஹைட்ரஜன் கேட்மியம் ரசக் கலவை மின் முனைகள், அயனிப் பெயர்ச்சியற்ற மின் முனைச் செறிவுக் கலங்கள் ஆகும். இவ்வாறு, மின் முனைகளின் செறிவுகளில் வேறுபாடில்லாமல், மின் முனைகள் வைக்கப் படும் மின் பகுளிக் கரைசல்களின் செறிவுகளில் வேறுபாடு இருத்தல் கூடும். இவை மின் பகுளிக் கரைசல் செறிவுக் கலங்கள் (electrolytic concentration cells) எனப் படும். சான்றாக, மின் வேதிக் கலங்கள் ┌────────────┴────────────┐ ↓↓ வேதிக் கலங்கள்செறிவுக் கலங்கள் ┌─────┴─────┐┌─────┴─────┐ ↓↓↓↓ அயனிப்அயனிப்அயனிப்அயனிப் பெயர்ச்சியுடன்பெயர்ச்சிபெயர்ச்சியுடன்பெயர்ச்சி கூடியவைஅற்றவைகூடியவைஅற்றவை <!---- பக்க ஒருங்கிணைப்புக்காக அட்டவணை பக்கத்தின் கடைசியில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.----> செறிவுக் கலம் 1இல் இரண்டு ஹைட்ரஜன் மின் முனைகள் ஒரே அழுத்தத்தில் a₁, a₂ என்ற இரு வேறு செயல் திறன்களைக் கொண்ட ஹைட்ரஜன் அயனிக் கரைசல்களில் வைக்கப் படுகின்றன. இச்செறிவுக் கலத்தின் மின்னியக்க விசை, ஹைட்ரஜன் அயனிக் கரைசல்களின் செறிவுகளின் வேறுபாட்டால் ஏற்படுகிறது. கலம் 2இல் இரு வெள்ளி (Ag) முனைகள், a₁, a₂ என்ற இரு வேறு செயல் திறன்களைக் கொண்ட வெள்ளி Ag+ அயனிக் கரைசல்களில் வைக்கப் பட்டுள்ளன. இக்கலத்தில், வெள்ளி அயனிக் கரைசல்களின் செறிவு வேறுபாட்டால், மின்னியக்க விசை ஏற்படுகிறது. மேலும், இவ்விரண்டு மின் கலங்களும், கரைசல்களுக்கிடையே நீர்மச் சந்திப்பைப் பெற்று விளங்குகின்றன. ஆகவே, இவ்விரண்டு கலங்களும், அயனிப் பெயர்ச்சியுடன் கூடிய செறிவுக் கலங்களாகும். மின்முனைச் செறிவுக் கலங்களும் சமன்பாடுகளும், ஹைட்ரஜன் மின்முனைச் செறிவுக் கலத்தில், H_2 (P_1) | H^\bigoplus | H_2 (P_2) \qquad (P_1 > P_2) P₁, P₂ ஆகிய இரு வேறு அழுத்தங்களில் ஹைட்ரஜன் மின் முனைகள் ஒரே செறிவுள்ள ஹைட்ரஜன் அயனிக்(H+) கரைசலில் வைக்கப்பட்டுள்ளன. இக்கலத்தின் முழு வேதி வினை: சமன்பாடு (அ) இன் படி, இச்செறிவுக் காலத்தில் 0.5 மோல் எண்ணிக்கை ஹைட்ரஜன் வளிமம், ஒரு மின் முனையின் P, வளி மண்டல அழுத்தத்திலிருந்து, மற்றொரு மின் முனையிலுள்ள P. வளி மண்டல அழுத்தத்திற்கு மாற்றப்படுகிறது. அதாவது, இக்கலத்தின் வினை ஹைட்ரஜன் வளியில் P, அழுத்தத்திலிருந்து P₂ அழுத்தத்திற்கு இயல்பாக விரிவடையும். 25°C இல் இக்கலத்தின் மின்னியக்க விசை E ஐப் பின் வரும் சமன்பாட்டின் மூலம் கணக்கிடலாம். E = \frac {0.059}{2} \ log \big( \frac {P_1}{P_2} \big) இச்சமன்பாட்டிலிருந்து, இச்செறிவுக் கலத்தின் மின்னியக்க விசை ஹைட்ரஜன் மின் முனைகளின் அழுத்தங்களைப் பொறுத்ததேயன்றி, அவை வைக்கப்பட்டுள்ள ஹைட்ரஜன் அயனிக் கரைசலின் செறிவைப் பொறுத்ததன்று என்பது தெளிவாகிறது. இதே போல், துத்தநாக ரசக் கலவைகளாலான செறிவுக் கலத்தைச் சான்றாகக் கூறலாம். Z_n (Hg)(Z_n \rightleftharpoons C_1) | Z_n^{2+} கரைசல் | Z_n (Hg)(Z_n \rightleftharpoons C_2) இக்கலத்தில், C₁, C₂ என்ற இரு வேறு செறிவுகளில் துத்தநாகத்தைக் கொண்ட, துத்தநாக ரசக் கலவை (Zn /Hg) மின் முனைகள், துத்தநாக அயனிகளைக் கொண்ட (Zn2+) கரைசலில் வைக்கப்பட்டுள்ளன. இக்கலத்தின் முழு வேதி வினை, Zn (Hg)C_1 = Zn (Hg)C_2 ஆகும். அதாவது C₁ அடர்வின் துத்தநாகத்தைக் கொண்ட ரசக் கலவையிலிருந்து துத்தநாகம், C₂ அடர்வில் துத்தநாகத்தைக் கொண்ட ரசக் கலவைக்கு மாற்றப் படுகிறது. இவ்வினையால், இச்செறிவுக் கலத்தின் மின்னியக்க விசை விளைகிறது. இச்செறிவுக் கலத்தின் மின்னியக்க விசை E ஐ 25°Cஇல் தோராயமாகக் கணக்கிட என்ற சமன்பாட்டைப் பயன் படுத்தலாம். மின் பகுளிச் செறிவுக் கலங்கள் (அயனிப் பெயர்ச்சியற்றவை). கீழே கொடுக்கப்பட்டுள்ள மின் கலத்தின் வேதி வினை H_2 \text {( வ . ,1 வ . ம. )}|HCl (a_1),AgCl (தி.) |Ag \frac{1}{2}H_2 \text{(வ )} + AgCl (திண்) \rightleftharpoons Ag (திண்) + HCl(a_1) ஆகும். (a₁⇌ ஹைட்ரோகுளோரிக் அமிலத்தின் செயல் திறன்) இக்கலத்தை a₂ செயல் திறன் கொண்ட ஹைட்ரோ குளோரிக் அமிலத்தைப் பெற்ற, மற்றொரு வேதிக் கலத்துடன் ஒன்றையொன்று எதிர்க்கும் வகையில் இணைத்தால், பின் வரும் வாய்பாடுடைய கலம் கிடைக்கும். H_2 \text {( வ . ,1 வ . ம. )} HCl (a_1) AgCl (தி.)| Ag \cdot Ag | AgCl (தி.)HCl (a_2) | H_2 \text {( வ . ,1 வ . ம. )} இக்கலத்தின் முழு வேதி வினை, HCl(a₂) = HCl(a₁) ஆகும். அதாவது, கலத்திலிருந்து பெறப் படும் ஒரு ஃபாரடே மின்னோட்டத்திற்கு, ஒரு மோல் எண்ணிக்கை ஹைட்ரோகுளோரிக் அமிலம், செயல் திறன் a₂ஐக் கொண்ட கரைசலிலிருந்து, செயல் திறன் a₁ உள்ள சுரைசலுக்கு மாற்றப் படுகிறது. இக்கலத்தின் மின்னியக்க விசை Eஐ 25°C இல் E = 0.059 \ log \big( \frac {a_2}{a_1} \big) என்ற சமன்பாட்டின் மூலம் கணக்கிடலாம். a₁, a₂ ஆகியவை ஹைட்ரோகுளோரிக் அமிலக் கரைசல்களின் செயல் திறன்கள் ஆகும். இத்தகைய கலங்களின் மின்னியக்க விசைகளை அளந் தறிவதன் மூலம், கரைசல்களின் செயல் திறன் குண கங்களைக் கண்டறியலாம். அயனிப் பெயர்ச்சியுடன் கூடிய செறிவுக் கலம். என்ற செறிவுக் கலம் அயனிப் பெயர்ச்சியுடன் கூடிய செறிவுக் கலத்திற்குச் சான்றாகும். இக்கலத்தின் மின்னியக்க விசை, கலத்திலுள்ள நீர்மச் சந்திப்பால் ஏற்படும் மின்னழுத்தமும் சேர்ந்ததாகும். இக்கலத்திலிருந்து பெறப் படும் ஒவ்வொரு ஃபாரடே மின்னோட்டத்திற்கும், கலத்தில் t(-) சமான எடை (equivalent weight) ஹைட்ரோகுளோரிக் அமிலம் செயல் திறன் a₂ஐக் கொண்ட கரைசலிலிருந்து, செயல் திறன் a₁ கொண்ட கரைசலுக்கு மாற்றப் படுகிறது. இதனையே, t_{(-)}HCl (a_2) = t_{(-)}HCl (a_1) எனக் குறிப்பிடலாம். இங்கு t (-) என்பது எதிர் மின் அயனியின் அயனிப் பெயர்ச்சி எண்ணாகும். இத்தகைய அயனிப் பெயர்ச்சியுடன் கூடிய கலத்தின் மின்னியக்க விசையை (E) 25°C இல் கணக்கிட, E = 2xt_{(-)}\times 0.059 \ log \big( \frac {m_2r_2}{m_1r_1} \big) என்ற சமன்பாட்டைப் பயன்படுத்தலாம். இங்கு m₂ , m₁ ஆகியவை ஹைட்ரோகுளோரிக் அமிலக் கரைசல்களின் மோலாலிட்டிகள்: r₁, r₂ ஆகியவை கரைசல்களின் செயல் திறன் குணகங்கள். t(-) என்பது எதிர் மின் அயனியின் அயனிப் பெயர்ச்சி எண் ஆகும். ஆகவே, இத்தகைய செறிவுக் கலத்தை அமைத்து, அதன் மின்னியக்க விசை Eஐ அளந்தறிந்தால், எதிர் மின் அயனிப் பெயர்ச்சி எண்ணை t(-) அறிய முடியும். மேலும், இக்கலத்தில் இவ்விரு கரைசல்களுக்கிடையே உள்ள நீர்மச் சந்திப்பு மின்னழுத்தத்தை (E) 25°C இல் E = 2 \times t_{(-)}\times 0.059 \ log \big( \frac {m_2r_2}{m_1r_1} \big) என்ற சமன்பாட்டின் மூலம் கணக்கிடலாம். m₂, m₁ ஆகியவை ஹைட்ரோகுளோரிக் அமிலக் கரைசல்களின் மோலாலிட்டிகள். r₁, r₂ ஆகியவை இக்கரைசல்களின் செயல் திறன் குணகங்கள். இதே போல் நேர் மின் அயனியின் அயனிப் பெயர்ச்சி எண்ணைப் பின் வரும் செறிவுக் கலத்தில் அமைத்து, அதன் மின்னியக்க விசையை அளந்தறிதல் மூலம் கணக்கிடலாம். Ag|AgCl(தி), HCl(a₁) | HCl(a₂), AgCl(தி)|Ag| இக்கலத்தின் மின்னியக்க விசை Eஐக் கணக்கிட, 25°Cஇல், E = 2 \times t_{(+)}\times 0.059 \ log \big( \frac {m_1r_1}{m_2r_2} \big) என்ற சமன்பாட்டைப் பயன்படுத்தலாம். இக்கலத்தில் a₁ > a₂. முன் போலவே, m₁ m₂ ஆகியவை கரைசல்களின் மோலாலிட்டிகள். r₁, r₂ ஆகியவை கரைசல்களின் செயல் திறன் குணகங்கள். t(+) என்பது நேர் மின் அயனியின் அயனிப் பெயர்ச்சி எண்ணாகும். செறிவுக் கலங்களின் பயன்கள். தகுந்த செறிவுக் கலங்களை அமைத்து, அவற்றின் மின்னியக்க விசைகளை அளந்தறிவதன் மூலம், கரைசல்களின் pH மதிப்புகள், ரசக் கலவைகளில் உலோகங்களின் செறிவுகள், நேர், எதிர் மின் அயனிகளின் அயனிப் பெயர்ச்சி எண்கள், கரைசல்களின் செயல் திறன் மற்றும் செயல் திறன் குணகங்கள், அணைவுச் சேர்மங்களின் தோன்றுதல் மாறிலிகள், அரிதிற் கரையும் உப்புகளின் கரை திறன், அவற்றின் கரை திறன் பெருக்கங்கள், நீராற் பகுபடு வீதம் மற்றும் நீராற் பகுபடு மாறிலிகள், நீரின் அயனிப் பெருக்கம் போன்றவற்றைக் கணக்கிட இயலும். —ஆர். கல்யாணசுந்தரம் நூலோதி. Samuel H. Maron and Carl F. Pruton, Principles of Physical Chemistry, Third Edition, The Macmillan Company, New York, 1963.