சிவபெருமான் வீரச் செயல்கள் நிகழ்த்திய தலத்தினை வீரட்டானம் (வீரஸ்தானம்) என்பர். அவை எட்டுத் தலங்களில் நிகழ்ந்தமையினால், அவ்வெட்டுத் தலங்களையும் அட்டானம் (அஷ்ட–வீரஸ்தானம்) எனக் கூறுவர். வீரச் செயல்கள் நிகழ்ந்த எட்டுத் தலங்களையும் அட்ட வீரட்டானம் (அஷ்ட-வீர-ஸ்தானம்) என்றும் வீரட்டம் (வீர-அஷ்டம்) என்றும் நூல்கள் குறிப்பதுண்டு. சிவபெருமான் எட்டு வீரச் செயல்களைச் செய்ததாகத் திருமூலர் திருமந்திரம் முதலிய சைவசமய நூல்கள் கூறும். ‘பதிவலியில் வீரட்டம் எட்டு’ என்று திருமூலர் திருமந்திரத்தில் இரண்டாம் தந்திரத்தில் எட்டுப் பாடல்கள் அமைந்திருக்கக் காணலாம். அவ்வீரச் செயல்கள், முறையே பிரமனின் தலையை அரிந்தது, அந்தகன் என்னும் கொடிய அசுரனை அழித்தது, திரிபுரங்களை எரித்தது, தக்கனைத் தடிந்தது, சலந்தரன் என்னும் அசுரனைக் கொன்றது, கசாசுரன் என்னும் யானை முகம் கொண்ட அசுரனின் தோலை உரித்தது, காமதேவனைக் காய்ந்தது, எமதருமனைக் காலால் எற்றியது என்பனவாகும். இந்த அட்ட வீரட்டத் தலங்களையும் திருநாவுக்கரசர், “காவிரியின் கரைக்கண்டி வீரட்டானம்” எனத் தொடங்கும் தம் திருத்தாண்டகத்தில் குறிப்பிட்டுள்ளார். சிவபெருமான் நிகழ்த்திய எட்டு வீரச் செயல்களும் அவை நிகழ்ந்த தேவாரப் பாடல்பெற்ற சிவத்தலங்களும் வருமாறு: வீரச்செயல்கள் தலங்கள் ந.ரா.மு.