பச்சைப்பூ நோய்
paccaippū nōy
இது எள்ளில் தோன்றும் நோயாகும்.
இது எள்ளில் தோன்றும் நோயாகும். பச்சைப் பூ நோய் (Phyllody disease) மைக்கோ பிளாஸ்மா போன்ற நுண்ணுயிரியால் ஏற்படுகிறது. இந்நோயின் அறிகுறிகளைப் பூக்கும் பருவத்தில் தெளிவாகக் காணலாம். பூவின் உறுப்புகள் பசுமையாக இலை போன்று மாற்றப் படுதல், இந்நோயின் குறிப்பிடத் தக்க அறிகுறியாகும். பூவில், புல்லி இதழ்கள் இலை போன்று நீண்டிருக்கும். அல்லி வட்டமும், மகரந்தக் கேசரமும் பசுமையாக இருக்கும். இலைகளில் நரம்பு வெளுத்தல், இலை சிறுத்தல் , கணு இடைப் பகுதி குட்டையாதல் போன்ற அறிகுறிகள் காணப் படும். அத்துடன், கணுக் குருத்து ஊக்குவிக்கப் பட்டு வளர்வதால், கிளைகள் மிகுதியாக உண்டாதல் போன்ற அறிகுறிகளும் இணைந்திருக்கும். எனவே, இந்நோயால் பாதிக்கப் பட்ட செடிகள் புதர் போன்று அடர்த்தியாக இருக்கும். இத்தகைய செடிகள் மலட்டுத் தன்மை பெறுவதால், பயன் விளைவதில்லை.
ஓரோக்சியஸ் ஆல்பிசிங்டஸ் (Orosius albicintus) என்னும் தத்துப் பூச்சிகள், இந்நோயைப் பரப்புகின்றன. நோயால் தாக்கப் பட்ட செடிகளை அவ்வப்போது களைந்து அழித்தலால், நோய் பரவுதலைத் தடுக்கலாம். நோயைப் பரப்பும் தத்துப் பூச்சிகளைக் கட்டுப் படுத்துவதற்கு ஹெக்டேர் ஒன்றுக்கு, மெத்தில் டெமெட்டான் 21/2 லி.அல்லது கார்பரில் 5 கி.கி. தெளிக்க வேண்டும். —கா. சிவப்பிரகாசம்
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 14, பக். 403)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/jhdemy2r/
தமிழ்“பச்சைப்பூ நோய்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/jhdemy2r/APA
Oliyon Research. (2026). பச்சைப்பூ நோய். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/jhdemy2r/MLA
"பச்சைப்பூ நோய்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/jhdemy2r/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment