சிறுநீர் அடக்க இயலாமை
ciṟunīr aṭakka iyalāmai
சிறுநீர்ப்பை, சிறுநீர்ப் புற வழி நோய்களாலும், நரம்பு மண்டலத் தண்டு வட நோய்களாலும், சிறுநீர் அடக்க இயலாத நிலை உண்டாகலாம்.
சிறுநீர்ப்பை, சிறுநீர்ப் புற வழி நோய்களாலும், நரம்பு மண்டலத் தண்டு வட நோய்களாலும், சிறுநீர் அடக்க இயலாத நிலை உண்டாகலாம். இந்நோயில் சிறுநீர் பிரிவது நோயாளிக்குத் தெரியாமலேயே இருக்கலாம்; சிறுநீர்ப் புற வழியிலிருந்து வெளிப்படுவதை அடக்க முடியாமலும் இருக்கலாம்.
குழந்தைகளில், எந்த விதக் காரணமும் தெரியாத நிலையில், தன் கட்டுப்பாடின்றிச் சிறுநீர் வெளிப்படும் நிலை நீர்க் கழிவு (enuresis) எனப்படும். இது பெரும்பாலும், இரவிலேயே நிகழ்கிறது. இதற்கு உளஞ் சார்ந்த சில பகுதிகள் காரணமாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. சிறுநீர்ப் பையின் உறுத்தல் தன்மையைக் குறைக்க, பெல்லடோனாவும், சுருக்குத் தசையை இறுக்கமடையச் செய்ய எஃபிட்ரின் மருந்தும் உதவுகின்றன. சிறுநீரை உரிய நேரத்தில் வெளியேற்றப் பழக வேண்டும்.
நெருக்கடி அடக்க இயலாமை (stress incontinence) என்னும் நிலையில், இருமல், தும்மல், சுமை தூக்குதல் ஆகியவற்றின் போது, தன் கட்டுப்பாடின்றி நெருக்கடியான நிலையில், சிறுநீர் வெளிப்படுகிறது. சிறுநீர்ப் புற வழியில் சுருக்குந் தசைகளின் வலிமையின்மையால் இது நிகழ்கிறது. பெண்களில் மகப் பேற்றிற்குப் பின்பும், சிறுநீர்ப் பை, விந்தகம் ஆகியவற்றின் மீதான அறுவை மருத்துவத்திற்குப் பின்பும் இந்நிலை தோன்றுகிறது. இதற்கு அறுவை மருத்துவம் பயன் தரலாம்.
முழுமையாக அடக்க இயலாமை (total incontinence) என்னும் நிலையில், சிறுநீர் ஒழுகிக் கொண்டே இருக்கும். சிறுநீர்ப் பையில் சிறுநீர் தேங்குவதே இல்லை. இதற்குப் பிறவி ஊனம், கூபக எலும்பு முறிவு, விந்தகம் மீதான அறுவை, நாட்பட்ட காச நோய், புற்று நோய், விந்தக அல்லது கருப்பைக் கழுத்துப் புற்று நோய், மைய நரம்பு மண்டல நோய் என்பன முக்கிய காரணங்கள் ஆகும்.
மருத்துவம். செருகு குழாயை நிலையாக வைக்கலாம். ஆண்களில், ஆண் குறிக்கான உறையை அணிந்து கொள்ளலாம். அறுவை மருத்துவமும் பயனளிக்கலாம். கிரசிலிஸ் தசை கொண்டு, ஒரு புதிய சுருக்குந்தசையை உருவாக்கலாம்; சிறுநீரகக் குழலை, சிறு குடலின் பகுதியாக இலியத்தில் பொதிந்து விடலாம். இதைச் சிறுநீரகக் குழல்—இலிய இணைப்பு (uretena-ileostomy) என்பர்.
சிறுநீர்ப் பையைக் கட்டுப்படுத்தும் பரிவு நரம்புகள், திரிகத்தின் 2, 3, 4 ம் நரம்புகள், உபத்த (pudendum) நரம்புகள் ஆகியவற்றின் பாதிப்பின் போதும், அடக்க இயலாமை உண்டாகலாம். இவை அனைத்திற்கும் அறுவை மருத்துவம் ஓரளவு பயனளிக்கும். —மு.கி. பழனியப்பன் நூலோதி. John Macleod, Davidson's Principle and practise of Medicine, Fourteenth Edition. ELBS, London, 1984.
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 10, பக். 352)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/je2e6v9a/
தமிழ்“சிறுநீர் அடக்க இயலாமை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/je2e6v9a/APA
Oliyon Research. (2026). சிறுநீர் அடக்க இயலாமை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/je2e6v9a/MLA
"சிறுநீர் அடக்க இயலாமை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/je2e6v9a/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment