சார்பு இயக்க உராய்வியல்
cārpu iyakka urāyviyal
சார்பு இயக்கத்திலிருக்கும் இரு திண்மப் பொருள்களின் இடையே உள்ள உராய்வைப் பற்றிக் கூறுவது சார்பு இயக்க உராய்வியல் (tribology) ஆகும்.
சார்பு இயக்கத்திலிருக்கும் இரு திண்மப் பொருள்களின் இடையே உள்ள உராய்வைப் பற்றிக் கூறுவது சார்பு இயக்க உராய்வியல் (tribology) ஆகும். இதில் அதன் அடிப்படைத் தன்மைகளும் தொழில் நுட்பப் பயன்பாடுகளில் உராய்வு விசையின் செயல்களும் விளக்கப்படுகின்றன. வேகமாற்றும் பற்சக்கரம், தாங்கிகள் (bearings) போன்றவற்றில் அவற்றின் பரப்புகளை மேலோட்டமாகப் பார்த்தால், வழவழப்பாகத் தெரியும். நுண்ணோக்கின், அவை சொர சொரப்பான பரப்புடையவையாகத் தோன்றும். இத்தகைய பரப்புகள் ஒன்றோடொன்று தொட்டுக் கொண்டு நகரும் போது, குறிப்பிட்ட சில பகுதிகளில் மீள்நிலை உருக்குலைவோ, மீளாநிலை உருக்குலைவோ தோன்றும்.
வெளியிலிருந்து செயல்படும் விசைகளைத் தாங்கும் அளவிற்குப் பரப்பு மிகும் வரை மட்டுமே இவை இருக்கும். இவை கீழ்க் காணும் விதிகளுக்குட்பட்டுத் தொடுகோட்டு வழுக்கு விசைகளைச் சீர் செய்கின்றன. இவ்விதிகள் உராய்வு விதிகள் எனப்படும். 1. உராய்வு செயல்படும் சுமைக்கு நேர் விகிதத்திலிருக்கும் (F=μw); 2. உராய்வு தொடும் பரப்பைப் பொறுத்து அமையாது. 3. உராய்வு வழுக்கி ஓடும் வேகத்தைப் பொறுத்து அமையாது என்பவற்றில் முதல் விதி உராய்வை வரையறுத்துக் கூறுகிறது.
தேய்வு என்பது தொடு பரப்பில் தோன்றும் பொருள் இழப்பு அல்லது மாற்றத்தைக் குறிக்கும். இந்தேய்வு, இத்தகைய இடைச்செயல் உராய்வு விசைகளாலேயே தோற்றுவிக்கப்படும். தேய்வு என்பதில், பரப்பில் தோன்றும் உருக்குலைவு, பொரிதல், அரித்தல் ஆகியவை அடங்கும்.
பொரிதல் என்பது மூன்றாம் பொருளின் இடைச் செயலால் தோற்றுவிக்கப்படுவதாகும். வேதிப் பொருள்களால் ஊக்குவிக்கப்படும் தேய்வு, அரித்தல் ஆகும். சுழற்சியாகச் சுமை ஏற்றப்படும் பரப்புகளில் தோன்றும் தேய்வு, சுழல் தேய்வு எனப்படும். பொதுவாக, தேய்வால் ஏற்படும் பொருள் இழப்பின் அளவு செயல்படும் சுமைக்கும் (w), நகரும் தொலைவுக்கும் (x) நேர்விகிதத்திலிருக்கும். பொருளின் கடினத் தன்மைக்கு (p) எதிர் விகிதத்திலுமிருக்கும்.
V = K எண்ணெய், மசகு (greese) போன்ற பொருள்களைப் பயன்படுத்தி உராய்வு விசை, தேய்வு ஆகியவற்றால் தோன்றும் விளைவுகளை ஓரளவு குறைக்க முடியும். இதற்கு உராய்வுத் தடுப்பு அல்லது உயவாக்கல் எனப் பெயர். இதற்குப் பயன்படும் பொருள்கள் உயவுப் பொருள்கள் எனப்படும். கிராஃபைட், மாலிப்டினம் டைசல்ஃபைடு போன்றவை திண்ம உயவுப் பொருள்கள். எண்ணெய் போன்றவை நீர்ம உயவுப் பொருள்கள், அரைத் திண்மமாக உள்ள மசகு போன்றவையும் உயவுப் பொருளாகப் பயன்படும்.
உயவுப் பொருள் நீர்மமாக இருந்தால், அது வெளியில் நிலை நீர்ம வடிவில் அழுத்தத்தைத் தோற்றுவிக்கலாம் அல்லது ஒரு நீர்ம வடிவில் தானே அழுத்தத்தைத் தோற்றுவிக்கலாம். இவ்வழுத்தமே இடைநிலையில் செயல்பட்டுச் சுமைக்கு உதவியாக அமைகிறது. வேகமாற்றும் பற்சக்கரங்கள், தாங்கி கள் போன்ற மிகு சுமை அமைப்புகளில் இவ்வகை அழுத்தத்தால் உயவுப் பொருளின் பாகுநிலையில் தோன்றும் மாறுபாட்டையும், பரப்பில் தோன்றும் மீள் உருவ மாற்றத்தையும் எடுத்துக் கொண்டு பகுப்பாய்வு செய்ய வேண்டும். —எஸ். சோமசுந்தரம் நூலோதி. Charles Kittel et.al, .Mechanics, Vol.I, Second Edition, McGraw-Hill Book Company, New York, 1973.
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 10, பக். 112)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/j7ue5t7m/
தமிழ்“சார்பு இயக்க உராய்வியல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/j7ue5t7m/APA
Oliyon Research. (2026). சார்பு இயக்க உராய்வியல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/j7ue5t7m/MLA
"சார்பு இயக்க உராய்வியல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/j7ue5t7m/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment