சூல் கால அகச் சுரப்பிக் குறைபாடு
cūl kāla akac curappik kuṟaipāṭu
சூல் காலத்தில் தைராய்டு, கணையம், அண்ணீரகம், முன் பிட்யூட்டரி முதலிய நாளமில் சுரப்பிகள் பெருமளவில் பாதிக்கப்படும்.
சூல் காலத்தில் தைராய்டு, கணையம், அண்ணீரகம், முன் பிட்யூட்டரி முதலிய நாளமில் சுரப்பிகள் பெருமளவில் பாதிக்கப்படும். தைராய்டு மிகையாகப் பணி புரியும் போது, சூலே அரிதாகும். இருப்பினும் கருத்தரிப்பு நடக்கிறது.
தைராய்டு மிகைப் பணியின் போது ஓய்வும், துயிலூட்டிகளுமே போதும். சில போது மெத்தில் தயோயூரசில், கார்பமசோல் ஆகியன தேவைப் படுகின்றன. தைராய்டு மருந்து கொடுக்கலாமா, வேண்டாமா என்பதில் கருத்து வேறுபாடு உள்ளது. தைராய்டு மருந்து கொடுக்காமல் இருந்தால், கருச் சிதைவு சூல் நச்சு நிலை, முன் முதிர்ச்சி, குழந்தை இறப்பு ஆகியவை நிகழலாம். சில போது 4–6 ஆம் மாதங்களில் தைராய்டு அறுவை செய்ய நேரிடும். தைராய்டு எதிர் மருந்துகள் தாய்க்குக் கொடுக்கப் படும் போது, அவை தாய்ப் பாலின் வழியே வெளியேறுவதால், குழந்தைக்குத் தாய்ப் பால் கொடுக்கக் கூடாது.
தைராய்டு குறை நிலையில் சூல் உண்டானாலும், கருச் சிதைவு ஏற்பட்டு விடும். நிறைந்த அளவில் தைராக்சினைக் கொடுத்தால், நிலைமை சீரடையலாம். கணையம், போதிய அளவு இன்சுலின் சுரக்காமையால், குருதியிலும், சிறுநீரிலும் சர்க்கரை தோன்றி, நீரிழிவு நோய் உண்டாகலாம். சூல் நிலையில், நீரிழிவு நோய் உண்டாவது இயல்பு. சூல் காலம் நீடிக்கும் போது, இன்சுலின் தேவையும் மிகும். குருதியில் குளூக்கோஸ் மிகையாகக் காணப்பட்டால், சூல் பெண்ணுக்குக் காளான் நோய்கள் ஏற்படலாம். மிகையான நீர்ப் பனிக் குடம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. குழந்தை பிறவி ஊனங்களுடன் பிறக்கலாம். பேறு கால நச்சு நிலையும் உண்டாகலாம். நீரிழிவு நோய் கொண்ட தாயின் சிசுக்கள், எடை மிகுந்துள்ளமை- யால், கருவுயிர்ப்புக் கடினமாக இருக்கும். எனவே, கருப்பைத் திறப்பு அறுவையே சிறந்தது. அரிதாகச் சூல் பையினுள்ளேயே குழந்தை இறந்து விடலாம். புதுப் பிறப்புக்கு, மூச்சு மண்டல நோய்கள் உண்டாவது எளிது.
பேறு காலத்தின் போது, மருத்துவரும், மகப் பேற்று வல்லுநரும் இருப்பது நல்லது. சரியான உணவு, உரிய அலகில் இன்சுலின் தரப்பட்டால், சிக்கல் இராது. கடஒலி வரைவி கொண்டு குழந்தையின் நிலையைக் கணக்கிட வேண்டும். 36 வாரங்களில் லெசீதின்–ஸ்பின்கோஃபைலீன் விகிதத்தைக் கணக்கிடுவது நல்லது. வயிற்றின் எக்ஸ் கதிர்ப் படம் எடுப்பது நல்லது. மகப் பேற்று வலி உண்டானவுடன், சிண்டோசினான் பயன்படுத்தி, மகப் பேற்றை ஊக்குவிப்பது நல்லது. இல்லையெனில், இடுக்கியைக் கொண்டு குழந்தையை வெளியேற்றலாம். அவசர நிலையின் போது, சூல் பைத் திறப்பு அறுவை செய்ய வேண்டும். குழந்தை பிறந்தவுடன், தாயின் இன்சுலின் தேவை குறைந்து விடும். பிறந்த குழந்தைக்கும் நீரிழிவு நோய் இருக்கிறதா என ஆய்தல் வேண்டும்.
சூல் காலத் தொடக்கத்தில், கருக் குடையின் முன்னிலையால், குருதிப் பெருக்கு ஏற்பட்டு, முன் பிட்யூட்டரி சுரப்பியில் குருதிப் பெருக்கு ஏற்படும். இந்நிலையை ஷீஹான் கூட்டியம் (Sheehan's syndrome) என்பர். இங்கு, தாய்க்கு அதிர்ச்சி ஏற்படும். பால் சுரப்பும், தீட்டும் நின்று விடும். தைராய்டு, அண்ணீரகம் ஆகியவையும் பாதிக்கப் படுகின்றன. அடிசன் நோயும் (குறைந்த குருதி அழுத்தம், அசதி, உடலில் நிற மாற்றம்) தோன்றலாம். மயிர் உதிர்ந்து, தோல் தடிக்கும். சோர்வும், அசதியும் உண்டாகும்.
சூலின் போது, அட்ரினல் சுரப்பி வீக்கமடைந்து, அதன் மூன்று வகையான சுரப்பிகளும் அதிகரிக்கின்றன. அண்ணீரகத்தின் இத்தகைய மிகையான சுரப்பால், பெருமளவில் தீங்கு உண்டாவதில்லை.
நாளமில் சுரப்பிகளில் மிகவும் முக்கியமானது சூல் ஒட்டு (placenta) ஆகும். இதன் சுரப்புகள் மனித கோரியானிக் செனிப்பகம் (HCG), ஈஸ்ட்ரோஜன், புரோஜெஸ்டிரான் ஆகியன. இவை அனைத்தும் குலின் போது தாய், சேய் ஆகியோரின் நல வாழ்வுக்கு மிகத் தேவை.
நூலோதி. John Hawkins, Text Book of Gynaecology, Ninth Edition, Churchill Livingstone, London, 1971.
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 10, பக். 654)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/j77n8qtv/
தமிழ்“சூல் கால அகச் சுரப்பிக் குறைபாடு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/j77n8qtv/APA
Oliyon Research. (2026). சூல் கால அகச் சுரப்பிக் குறைபாடு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/j77n8qtv/MLA
"சூல் கால அகச் சுரப்பிக் குறைபாடு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/j77n8qtv/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment