உத்தரை
uttarai
பாரதப்போர் வீரர்களுள் ஒருவனும் மச்ச நாட்டின் அரசனுமாகிய விராடனுக்கும் சுதட்சணைக்கும் பிறந்தவள்.
பாரதப்போர் வீரர்களுள் ஒருவனும் மச்ச நாட்டின் அரசனுமாகிய விராடனுக்கும் சுதட்சணைக்கும் பிறந்தவள். பாண்டவர்கள் துரியோதனன் கூறியவாறு ஓராண்டுக் காலம் மறைந்துறையும் வாழ்க்கை (அஞ்ஞாத வாசம்) நடத்த விராடனிடம் சென்றனர். அப்போது பேடி உருவங் கொண்டிருந்த அருச்சுனனிடம் இவள் நடனம் கற்றுக் கொண்டாள். விராடன் மகன் உத்தரன் இவளை அருச்சுனனுக்கு மணம் செய்விக்கக் கருதினான். ஆனால் அருச்சுனன் இவள் வயதில் இளையவள் என்று கூறி மறுத்து, தன் மகன் அபிமன்யுவிற்குத் மணம் செய்வித்தான். பாண்டவர்களுக்கும் துரியோதனன் முதலியவர்களுக்கும் போர் நிகழ்ந்தபொழுது அசுவத்தாமன் பாண்டவர் கருவறுக்க அம்பு எய்தான். அந்த அம்பு இவள் வயிற்றிலுள்ள கருவை அழிக்கப் புகுந்தது. அப்போது கண்ணன் அருளால் இவளும் கருவும் காப்பாற்றப்பட்டனர்.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 889)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/j6f6zy74/
தமிழ்“உத்தரை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/j6f6zy74/APA
Oliyon Research. (2026). உத்தரை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/j6f6zy74/MLA
"உத்தரை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/j6f6zy74/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment