இராசிபுரம்
irācipuram
சேலம் மாவட்டத்திலுள்ளதொரு வட்டம்.
சேலம் மாவட்டத்திலுள்ளதொரு வட்டம். இந்தப் பெயரில் ஊரும் உண்டு. சேலத்திலிருந்து 25 கி.மீ. தெற்கில் அமைந்துள்ள இவ்வூர் நெய்க்குப் பெயர்பெற்றது. அண்மையில் இவ்வட்டத்தைத் தமிழக அரசு பின்தங்கிய வட்டங்களில் ஒன்றாக அறிவித்துள்ளது. நெசவாளர்கள் மிகுந்த இவ்வூரில் கயிலாயநாதர் ஆலயம் உள்ளது. இக்கோயிலில் பல கல்வெட்டுகள் உள்ளன. இராசிபுரம் கயிலாயநாதரைப் பற்றிக் ‘கயிலாயநாதர் சதகம்’ என்னும் நூலொன்றுள்ளது. கடையெழு வள்ளல்களுள் ஒருவனான வல்வில்லோரியின் அழகான உருவச் சிலையைக் கயிலாயநாதர் கோயிலில் காணலாம். இவ்வூரைப்பற்றி, பிற்காலத்தில் வாழ்ந்தவரும் ‘சந்திரவிலாசம்’ என்னும் காவியத்தை எழுதியவருமான மாம்பழக் கவிராயர் பல பாடல்களைப் பாடியுள்ளார். அவர் பார்வையிழந்தவர். இவ்வட்டத்தைச் சார்ந்த நாமகிரிப்பேட்டையில் அண்மைக்காலம் வரை இரும்புத் தாதுக்களைத் தோண்டியெடுத்து உருக்கி இரும்புக் கருவிகளைச் செய்துவந்தனர். பனைமரத்துப்பட்டி ஏரியிலிருந்து இராசிபுரத்திற்குக் குழாய்கள் மூலம் தண்ணீர் கொண்டுவரப்படுகிறது. இராசிபுரம் கோனேரிப்பட்டியில் கூட்டுறவுத் துறையினரால் இயங்கும் நூற்பாலையொன்று இயங்கி வருகின்றது. ஆ. இராமசாமி அய்யா என்னும் பெரியார் ‘இரவீசமரபினர்காதை’ என்னும் பெயரில் காவியம் ஒன்றை இயற்றியுள்ளார். ‘இராசுவபாண்டவீயம்’ என்னும் தெலுங்குக் காவியத்தைப் பின்பற்றி எழுதப்பட்டது இந்நூல். இராமாயணத்தையும் மகாபாரதத்தையும் குறிக்கும் வண்ணம் சிலேடையாக தமிழில் எழுதப்பட்டுள்ளது இதன் சிறப்பாகும். உலகப் புகழ்பெற்ற ஆங்கில எழுத்தாளர்களுள் ஒருவரான ஆர்.கே. நாராயணன் இவ்வூரில் பிறந்தவர். இவ்வூரை அடுத்துள்ள ஆண்டகலூரில் தமிழக அரசு திருவள்ளுவர் கலைக்கல்லூரியை அமைத்துள்ளது. இராசிபுரத்தின் மக்கள்தொகை 33,123 (1981) ஆகும்.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 48)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/j4e9khcn/
தமிழ்“இராசிபுரம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/j4e9khcn/APA
Oliyon Research. (2026). இராசிபுரம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/j4e9khcn/MLA
"இராசிபுரம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/j4e9khcn/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment