சிற்றலை மின்னழுத்தம்
ciṟṟalai miṉṉaḻuttam
நேர் மின்னழுத்தம் எந்த நேரத்திலும் ஒரே அளவு கொண்டிருக்கும், மாறு திசை மின்னோட்டத்தை நேர் மின்னோட்டமாக மாற்றும் போது, தூய நேர் மின்னோட்டம் கிடைப்பதில்லை.
நேர் மின்னழுத்தம் எந்த நேரத்திலும் ஒரே அளவு கொண்டிருக்கும், மாறு திசை மின்னோட்டத்தை நேர் மின்னோட்டமாக மாற்றும் போது, தூய நேர் மின்னோட்டம் கிடைப்பதில்லை. நேர் மின்னழுத்தம் படம் 1 இல் உள்ளவாறு, சிறிது அலைவைக் கொண்டிருக்கும்.
<!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.----> சிறு உயரம் கொண்ட இம்மின்னலைகளைச் சிற்றலை மின்னழுத்தம் (ripple voltage) எனலாம். மாறு திசை மின்னோட்டத்தை நேர் மின்னோட்டமாக மாற்றத் திருத்திச் சுற்றுகள், வடிப்புச் சுற்றுகள் ஆகியன பயன்படுத்தப்படும். வடிப்புச் சுற்றுகள் சிற்றலை மின்னழுத்தத்தைக் குறைக்கப் பயன்படும். சிற்றலைக் காரண எண் என்பது சிற்றலை மின்னழுத்தத்தைக் குறிக்கப் பயன்படும் எண்ணாகும். சிற்றலை மின்னழுத்தம் தெளிவான நீரில் குமிழ்கள் தோன்றும் போது அலை ஏற்படுவது போல் தோற்றமளிப்பதால், இதைக் குமிழ் மின்னழுத்தம் என்றும் கூறலாம். வடிப்புச் சுற்றுகளுக்கேற்றவாறு சிற்றலை மின்னழுத்தம் மிகவும் மாறும், சிற்றலை மின்னழுத்தம், நேர் மின்னழுத்தத்தில் மிகுதியாக இருந்தால், பயன்படுத்தப்படும் கருவிகளில் இடையூறு நேரலாம். இது வானொலிப் பெட்டிகளில் ஒரு வகையான ‘உம்’ என்ற தொடர் ஒலியை உண்டாக்கும். —க.அர. பழனிச்சாமி நூலோதி. Millman and Halkias. Electronic Devices and Circuits, International Student Edition, McGraw—Hill Book Company, Singapore. 1982.
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 10, பக். 312)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/j34th5a4/
தமிழ்“சிற்றலை மின்னழுத்தம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/j34th5a4/APA
Oliyon Research. (2026). சிற்றலை மின்னழுத்தம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/j34th5a4/MLA
"சிற்றலை மின்னழுத்தம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/j34th5a4/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment