இளங்கண்டீரக்கோ
iḷaṅkaṇṭīrakkō
சங்க காலத்தில் வாழ்ந்த வள்ளலும் அரசனுமாக விளங்கிய கண்டீரக்கோப் பெருநள்ளியின் தம்பி.
சங்க காலத்தில் வாழ்ந்த வள்ளலும் அரசனுமாக விளங்கிய கண்டீரக்கோப் பெருநள்ளியின் தம்பி. இவனும் இளவிச்சிக்கோவும் ஒன்றாகச் சேர்ந்திருந்தபோது, அங்கு வந்த பெருந்தலைச் சாத்தனார் இவனைத் தழுவிக் கொண்டு, இளவிச்சிக்கோவைத் தழுவாது விடுத்தார். தன்னைத் தழுவாதது ஏன் என வினவிய இளவிச்சிக்கோவிடம் புலவர் பின்வருமாறு கூறினார்:– ‘ஆடவர்கள் வெளியே சென்றிருந்த போதிலும், வந்த இரவலருக்குப் பிடி முதலியன ஈந்து பேணும் கொடை மாண்பு மிக்க மகளிரை உடைய அரச மரபினைச் சேர்ந்தவனாதலால் இனங்கண்டீரக்கோவைத் தழுவினேன். நீ பெண் கொலை புரிந்த நன்னன் மரபில் வந்தவன் ஆதலாலும், இரவலர்க்கு அடைத்த கதவினையுடைய அரசன் மரபில் வந்தவன் ஆதலாலும், உன்னைத் தழுவலாமாயினும், தழுவாது விடுத்தேன்’ (புறம். 157). இளங்கண்டீரக்கோ வள்ளல் மரபில் வந்தவன்; புலவர் பாடும் புகழ் உடையவன்.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 463)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/hztmf4qj/
தமிழ்“இளங்கண்டீரக்கோ”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/hztmf4qj/APA
Oliyon Research. (2026). இளங்கண்டீரக்கோ. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/hztmf4qj/MLA
"இளங்கண்டீரக்கோ." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/hztmf4qj/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment