ஆசூர்பானிபல்
ācūrpāṉipal
ஆசூர்பானிபல் (கி. மு. 669-626) அசீரியர்களுடைய கடைசிப் பேரரசன் ; இவன் காலத்தில் அசீரியர்களுடைய புகழ் உலகெங்கும் பரவியது.
ஆசூர்பானிபல் (கி. மு. 669-626) அசீரியர்களுடைய கடைசிப் பேரரசன் ; இவன் காலத்தில் அசீரியர்களுடைய புகழ் உலகெங்கும் பரவியது. இவன் எகிப்து, பாபிலோன், ஈலம் முதலிய நாடுகளை வென்றான். ஆயினும் இப்போர்களால் பலவீனமடைந்த அசீரியாவைப் பிற்காலத்தில் பிற நாட்டவர்கள் வெல்வது எளிதாயிற்று. இவன் இறந்து 14 ஆண்டுகட்குப் பிறகு அசீரிய சாம்ராச்சியம் முடிவு எய்தியது. இவனுக்கு இலக்கியத்திலும் கலைகளிலும் ஆர்வம் உண்டு. இவனது தலைநகரமான நினேவாவில் பல அழகிய கட்டடங்களைக் கட்டுவித்தான். இவன் அரண்மனையில் ஒரு பெரிய நூல் நிலையம் இருந்தது. பண்டைய பேரரசர்களில் இவன் ஒருவன் என்று கூறலாம். தே. வெ. ம.]]
மூலம் · source: கலைக்களஞ்சியம் (தமிழ் வளர்ச்சிக் கழகம்) — CC BY-SA 3.0 (தொகுதி 1, பக். 387)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/hx89jdsh/
தமிழ்“ஆசூர்பானிபல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hx89jdsh/APA
Oliyon Research. (2026). ஆசூர்பானிபல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/hx89jdsh/MLA
"ஆசூர்பானிபல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hx89jdsh/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment