இறவு சுல்கூல் படைப்போர்
iṟavu culkūl paṭaippōr
காப்பிய இலக்கணங்கள் அமையப் பெற்ற ஓர் இசுலாமியத் தமிழ் இலக்கியமாகும்.
காப்பிய இலக்கணங்கள் அமையப் பெற்ற ஓர் இசுலாமியத் தமிழ் இலக்கியமாகும். இது சல்காப் படைப்போர் எனவும் சொல்வப்படுகிறது. இதனை இயற்றியவர் குஞ்சு மூசு லெப்பை காசி ஆலிம் புலவராவார். இவ்விலக்கியம் இசுலாத்தை எதிர்த்த இறவுசுல்கூல் என்பவனுக்கும், அவனை எதிர்த்து இசுலாத்தை நிலைநாட்டிய கற்புநாயகி சல்கா என்னும் பெயர் கொண்ட உலோகதாய் அமர் செய்யதுக்கும் நடைபெற்ற போரினை விவரிக்கிறது. இதன் காலம் கி.பி. 1818.
இக்காவியத்தின் தொடக்கத்தில் இரண்டு காப்புச் செய்யுட்கள் உள்ளன. கடவுள் வாழ்த்தில் இடம் பெறத் தவறிய இரண்டு செய்யுட்கள் நூலின் இறுதியில் தரப்பட்டுள்ளன. இக்காவியம் இயற்றப்பட்ட நாளினை இச்செய்யுட்கள் சுட்டிக்காட்டுகின்றன.
இறவுசுல்கூல் படைப்போரில் 2383 திருவிருத்தங்கள் 45 படலங்களில் அமைந்துள்ளன. வாழ்க்கை வரலாறு கூறும் ஏனைய காப்பியங்களில் உள்ளது போன்று கடவுள் வாழ்த்து, நாட்டு நகர வருணனையைத் தொடர்ந்து மூதாதையர் பற்றிய படலம் ஆகியவை இக்காப்பியத்தில் இல்லை. தாம் கூற வந்த வரலாற்றுடன் தொடர்புடைய போர் நிகழ்ச்சியை ஆசிரியர் பாடியுள்ளார்.
இறவுசுல்கூல் படைப்போர்க் காவியம் பெயருக்கேற்ப வீரச் செயல்களின் வருணனையை மிகுதியாகக் கொண்டுள்ளது. அடுத்த நிலையில் இயற்கை வருணனை இடம்பெறுகிறது. இக்காவியத்தில் குறிப்பிடத்தக்க மற்றோர் இயல்பு பெண்பாத்திரப் படைப்பாகும். இறவுசுல்கூல் படைப்போரின் காவியத் தலைவி ஒரு பெண்ணாக இருப்பினும், இக்காவியத்தில் இரண்டு பெண் பாத்திரங்களே இடம் பெற்றுள்ளன. காவியத்தலைவி சல்கா அம்மையாரும் ஒரு முதியவளுமே அப்பாத்திரங்களாவர்.
அல் குர்ஆனின் கருத்துகளைக் காவியக் கருத்தோட்டத்திற்கேற்ப நூலாசிரியர் எடுத்தாண்டு விளக்கியுள்ளார். அவர் பல அருஞ்சொற்களைக் கையாண்டுள்ளார். ‘இரிஞன்’ என்பது பகைவன் என்ற பொருளிலும், ‘உபாயிகள்’ என்பது உபாயஞ் செய்பவர்கள் என்ற பொருளிலும், ‘உறவி’ என்பது எறும்பு என்ற பொருளிலும் ஆளப்பட்டுள்ளன. இறவுசுல்கூல் படைப்போரில் ஓசைநயமும் சந்தமும் சிறப்புற அமைந்துள்ளன. சி.ந.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 518)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/huudeu5x/
தமிழ்“இறவு சுல்கூல் படைப்போர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/huudeu5x/APA
Oliyon Research. (2026). இறவு சுல்கூல் படைப்போர். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/huudeu5x/MLA
"இறவு சுல்கூல் படைப்போர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/huudeu5x/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment