இலாசுகி எரால்டு சோசபு
ilācuki erālṭu cōcapu
ஆங்கில அரசியல் அறிவியலாருள் ஒருவர்; இவர் ஒரு சமூகவியலாரும் ஆவார்.
ஆங்கில அரசியல் அறிவியலாருள் ஒருவர்; இவர் ஒரு சமூகவியலாரும் ஆவார். இவர் கி.பி. 1893–ஆம் ஆண்டு மான்செசுட்டரில் பிறந்தார். ஆக்சுபோர்டு பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற்ற இவர் கானடா, அமெரிக்க ஐக்கிய நாடுகள் போன்ற நாடுகளின் பல்கலைக் கழகங்களில் 1914–க்கும் 1920–க்கும் இடைப்பட்ட ஆண்டுகளில் உரையாற்றிப் புகழ்பெற்றார். மாக்கில் (McGill), ஆர்வர்டு (Harward), ஏல் (Yale) போன்ற பல்கலைக் கழகங்கள் அவற்றுள் சில. இவர் இலண்டன் பொருளதார இயல் பள்ளியில் 1920 ஆம் ஆண்டில் கற்பிக்கத் தொடங்கினார். அங்கேயே 1926–இல் இவர் அரசியல் துறைப் பேராசிரியரானார்.
இலாசுகி எரால்டு சோசபு (Laski, Herald Joseph) சிறந்த சொற்பொழிவாளர், மாணாக்கர் இவரை உளமாரப் போற்றிப் புகழ்ந்தனர். இங்கிலாந்து தொழிற்கட்சியின் நிருவாகக் குழுவில் உறுப்பினராக இருந்து, 1936 முதல் 1949 வரை பணியாற்றினார். இவர் கி.பி. 1945 முதல் 1946 வரை தொழிற்கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்றார். இவர் எழுதிய சிறப்பான நூல்கள் பின்வருவன; அரசியற் கலை இலக்கணம் (A Grammer of Politics 1925), இக்கால அரசுகளில் உரிமை (Liberty in the Modern State - 1930), அமெரிக்கக் குடியரசுத் தலைவர்முறை (The American Presidency - 1940), அமெரிக்க மக்களாட்சி முறை (The American Democracy-1948), அரசியல் அமைப்புத் திட்டம் பற்றிய ஆய்வுகள் (Reflections on the Constitution-1951). இவர் காலமான பின்பு இவர்தம் இறுதிச் சொற்பொழிவுகள் வெளியிடப்பட்டன. சென்னைப் பச்சையப்பன் கல்லூரி முதல்வராகவும் பொருளாதாரப் பேராசிரியராகவும் இருந்த இராசேசுவரன் இலாசுகியின் மாணவர்களுள் ஒருவர்.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 362)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/hsztpkpk/
தமிழ்“இலாசுகி எரால்டு சோசபு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/hsztpkpk/APA
Oliyon Research. (2026). இலாசுகி எரால்டு சோசபு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/hsztpkpk/MLA
"இலாசுகி எரால்டு சோசபு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/hsztpkpk/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment