அயினி அக்பரி
ayiṉi akpari
அக்பர் அவையிலிருந்த அபுல்பசல் (த.க.) என்னும் அறிஞரால் இயற்றப்பட்ட ஒரு நூல்.
அக்பர் அவையிலிருந்த அபுல்பசல் (த.க.) என்னும் அறிஞரால் இயற்றப்பட்ட ஒரு நூல். அவர் இயற்றிய அக்பர்நாமா (த.க.) என்னும் நூல் அக்பருடைய குடும்பத்தைப் பற்றியும், பண்புகளைப் பற்றியும் விவரித்துக் கூறுவதுபோல, இந்நூல் அக்பருடைய ஆட்சி முறையையும், அவ்வரசன் ஆட்சியில் நாடு இருந்த நிலையையும் பற்றி விரிவாகக் கூறுகிறது. இது மூன்று பாகங்கள் அடங்கியது. நூலால் சுமார் 350 ஆண்டுகளுக்குமுன் வட இந்தியாவின் அரசியல், சமூக நிலைகளைப் பற்றி அறிந்துகொள்ள முடிகிறது. வட இந்திய வரலாற்று ஆதார நூல்களில் ஒன்றாக இதைக் கருதலாம்.
மூலம் · source: கலைக்களஞ்சியம் (தமிழ் வளர்ச்சிக் கழகம்) — CC BY-SA 3.0 (தொகுதி 1, பக். 179)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/hsauef72/
தமிழ்“அயினி அக்பரி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hsauef72/APA
Oliyon Research. (2026). அயினி அக்பரி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/hsauef72/MLA
"அயினி அக்பரி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hsauef72/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment