இது செஃபலோஸ்போரியம் அக்ரிமோனியம் என்னும் காளானிலிருந்து எடுக்கப்படும் செஃபலோஸ்போரின் வகையைச் சார்ந்த மருந்து. இது வேதி அமைப்பில், பெனிசிலினை ஒத்தது. அடிப்படை உட்கரு, 7- அமினோ செஃபலோஸ்போரானிக் அமிலமாகும். இதில், டைஹட்ரோதையசின் உட்கருவும், லாக்டம் வளையமும் காணப்படும். இவை பெனிசிலினைப் போன்றே இருக்கும். லாக்டம் வளையமே, நுண்ணுயிர் எதிர்ப்புக்குக் காரணமாகிறது. செஃபலாக்சின் (cephalexin) பெனிசிலினைப் போன்று வினைபுரிதிறம் பெற்றிருந்தாலும் பென்சிலி னேஸ் விளைவுகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கிறது. எனினும் எண்டரோகாக்கை, புரோடியஸ் நுண்ணுயிர் கள் மீது வினைபுரிவதில்லை. அமில நிலையில் நிலையாக இருக்கும் செஃபலாக்சின் செரிமானப் பாதையில் நன்கு இறுக்கப்படுகிறது. இம்மருந்து ஃபுளுரா, இதய உறை, மூட்டு நீர்மம், தோல், தசை, இதயம், இரைப்பைச் சுவர், கல்லீரல், மண்ணீரல். 13. நரம்பு முலைகள் 14. அன்தகட்டு முனைகள் 15. கொல்றி இழைகள் சிறுநீரகம் ஆகியவற்றுள் புகுந்து வினை புரிகிறது. கொழுப்பில் கரையாமையால், செல்களுக்குள்ளோ குருதி மூளைத் தடையைத் தாண்டியோ உட்செல்வதில்லை. மிகச் செறிவடைந்த நிலையில், சிறுநீரில் வெளிப்படுகிறது. கிளப்சீலா நிமோனியா பாதிப்பில் செஃபலாக்சின் நன்கு வினை புரிகிறது. ஜெண்டாமைசீனுடன் சேர்த்துக் கொடுத்தால், நல்ல பயனளிக்கிறது. சிறுநீரகப் பாதிப்புகள், மூச்சுக் குழல் அழற்சி, இன்ஃபுளுயென்சா போன்ற நோய் நிலைகளில் செஃபலாக்சின் பெரும் பயனளிக்கிறது. பெனிசிலினுக்குக் கூருவுணர்வு கொண்டவர்களுக்கு இம்மருந்தைக் கொடுக்கக் கூடாது. செஃபலாக்சின் 250–500 மி.கி. குளிகையாகவும், 1 கிராம் மாத்திரையாகவும், 5 மி.லி. கரையத்தில் 125, 500 மி.கி. அளவில் கிடைக்கிறது. ஒரு மி லிட்டருக்கு 100 மி.கி. என்னும் அளவில் சொட்டு மருந்தாகவும் கிடைக்கிறது. —அ. கதிரேசன் நூலோதி. Charles R.Craig, Modern Phamacology, First Edition, Little Brown and Co., Boston, 1982.