நுண் காலக் கணிப்பளவுக் கருவி
nuṇ kālak kaṇippaḷavuk karuvi
கடலில் செல்லும் கப்பல்களில் மிகத் துல்லியமாக நேரத்தைக் காட்டும் கைக்கடிகாரம் நுண் காலக் கணிப்பளவுக் கருவி (chronometer) எனப் படுகிறது.
கடலில் செல்லும் கப்பல்களில் மிகத் துல்லியமாக நேரத்தைக் காட்டும் கைக்கடிகாரம் நுண் காலக் கணிப்பளவுக் கருவி (chronometer) எனப் படுகிறது. இது அளவில் பெரியதாகவும் இருக்கும்.சில சமயங்களில், நுட்பமான கைக் கடிகாரங்களுக்கும் இப்பெயர் வழங்கப் படுகிறது. எனவே, நுண் காலக் கணிப்பளவுக் கருவியை, கைக் கடிகாரத்திலிருந்து வேறு படுத்திக் காட்டும் சிறப்பியல்புகளைக் காணலாம்.
முதலாவது கனமான தராசுச் சக்கரத்தைப் பற்றிக் காண்போம். ஒரே மையமுள்ள இரு வளையங்களுக்குள் வைப்பதன் மூலம், இச்சக்கரத்தின் அச்சு செங்குத்தாக நிலைப் படுத்தப் படுகிறது. கப்பலில் சுழற்சி (rolling), உந்தல் (pitching) போன்றவற்றால் நுண் காலக் கணிப்பளவுக் கருவி வைக்கப்பட்டுள்ள பெட்டி பாதிக்கப் படாமல் இருக்கும் பொருட்டுத் தராசுச் சக்கரம் சுழல் முனை மூலம் இணைக்கப் படுகிறது.
நுண்காலக் கணிப்பளவுக் கருவியில் உள்ள தராசுச் சுருள் வில், தட்டையான சுருள் வில் (helix) வடிவத்திற்குப் பதிலாக உருளை (cylindrical) வடிவில் சுற்றப் பட்டுள்ளது. மேலும் சம நிலைப் பொறிக்கும், இயக்கும் ஆற்றலுக்கும், இடையே தொடர்பு செய்து ஒழுங்கு படுத்தும் ஒரு சிறப்பான விடுபடு அமைப்பும் (escapment) உள்ளது.
மேலும் கம்புருவ வட்டு (fusee) ஒன்றுள்ளது. இது மையச் சுருள் வில்லிலுள்ள ஆற்றலை தொடர்ச்சியாக தன் நீளத்தை மாற்றிக் கொண்டே இருக்கும் ஒரு நெம்பு கோலின் வழியாக பணியாக மாற்றுகிறது. இந்தெம்பு கோல் சுருள் வில் இறுக்கமாகக் சுற்றப் பட்டிருக்கும் போது குட்டையாகவும், கடிகாரம் ஓடிக் கொண்டிருக்கும் போது நீளமாகவும் இருக்கும். இதனால், கடத்தப்படும் ஆற்றல் எந்நேரத்திலும் சீராக்கப் படுகிறது.
முற்காலத்தில் கடலில் செல்லும் கப்பல்கள் பயணத்தின் போது, நெடு வரையைத் தீர்மானிப்பதற்குக் கிரீன்விச் நேரத்தைக் குறிக்கும் நுண் காலக் கணிப்பளவுக் கருவியை யே நம்பியிருந்தன. பின்னர் 1920–1930 ஆண்டுகளில் வானொலியால் ஒலி பரப்பப் படும் நேரக் குறிகள் (time signals) கடற் பயணியர்க்குக் கிரீன்விச் நேரமாக நாளின் எந்நேரத்திலும் கிடைக்கப் பெற்றது. அதனால், நெடு வரையைத் (longitude) தீர்மானிக்க உதவும், நுண் காலக் கணிப்பளவுக் கருவியின் பயன்பாடு குறையத் தொடங்கியது. —வா. அனுசுயா
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 14, பக். 25)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/hhy9dryt/
தமிழ்“நுண் காலக் கணிப்பளவுக் கருவி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/hhy9dryt/APA
Oliyon Research. (2026). நுண் காலக் கணிப்பளவுக் கருவி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/hhy9dryt/MLA
"நுண் காலக் கணிப்பளவுக் கருவி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/hhy9dryt/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment