அறிக்கை இயற்றல்

aṟikkai iyaṟṟal
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வெளிப்பலன் அச்சிடப்படும் பொழுது, தானியங்கு கணக்கீடுகளை நிறைவேற்ற அறிக்கை இயற்றிகள் தெரிவு செய்த தகவல்களையும் முறைகளையும் பயன்படுத்தும். உண்மையில் இந்த இயற்றிகள் பெரும்பான்மை தகவல் தள மேலாண்முறையில் உள்ளன. இவை வினாக்களிலிருந்து அறிக்கைகளை உருவாக்கும் ஒரு வினாவை உருவாக்குவது போல் ஸ்டார்பேசில் அறிக்கை உருவாக்கலாம். இதைச் செய்ய, எக்ஸ்புளோரர் தகட்டிலுள்ள Report என்னும் பகுதியை இயக்குக. பட்டியிலிருந்து இதையும் செய்க. Select New Report. தன் வலவிச் சாளரம் தோன்றும். இச்சாளரம் கிடைக்கும் அட்டவணைகள் வினாக்கள் ஆகியவற்றைக் காட்டும். இதைத் தேர்ந்தெடுத்து Next பொத்தானை அழுத்தவும். அடுத்துத் தெரிவுசெய்த அட்டவணையிலுருந்து கிடைத்த புலப்பட்டியலுடன் சாளரம் திரையில் தோன்றும் அறிக்கையில் சேர்க்க வேண்டிய புலங்களைத் தெரிவு செய்க. இதற்குப் பின்வருவனவற்றைப் பயன்படுத்துக. the → and → buttons இதைப் பயன்படுத்தவும். Next என்னும் பொத்தானை அழுத்தவும். ஆக, ஓர் அட்டவணை அல்லது வினாவிலிருந்து பன்ம அறிக்கைகளை உருவாக்கிச் சேமிக்கலாம். நிகழ்நிரல் : ஒரு தகவல் கோப்பின் பகுப்பை அச்சிட வடிவமைக்கப் பயன்படும் நிகழ்நிரல் — report generation
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணிப்பொறி அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 190)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/hgpcx2sw/

தமிழ்
“அறிக்கை இயற்றல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hgpcx2sw/
APA
Oliyon Research. (2026). அறிக்கை இயற்றல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/hgpcx2sw/
MLA
"அறிக்கை இயற்றல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hgpcx2sw/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment