இராமசாமிக் கவுண்டர், ஆ
irāmacāmik kavuṇṭar, ā
வட ஆர்க்காடு மாவட்டம் மாடப்பள்ளி என்னும் சிற்றூரில் அனுமந்தராய கவுண்டருக்கும் அங்கம்மாளுக்கும் மூத்த மகனாய் கி.பி.
வட ஆர்க்காடு மாவட்டம் மாடப்பள்ளி என்னும் சிற்றூரில் அனுமந்தராய கவுண்டருக்கும் அங்கம்மாளுக்கும் மூத்த மகனாய் கி.பி. 1898–ஆம் ஆண்டு சூன் திங்களில் பிறந்தார். இவர் திருப்பத்தூரிலும் வேலூரிலும் பள்ளிப்படிப்பை முடித்துச் சென்னைக் கிறித்தவக் கல்லூரியில் படித்து, 1922–இல் பட்டம் பெற்றார். இவர்தம் மனைவியார் கனகம்மா
இராமசாமிக் கவுண்டர்
வாணியம்பாடி இசுலாமியக் கல்லூரியில் கணித ஆசிரியராகப் பதவியேற்ற இவர், ஆசிரிய பயிற்சிப் பட்டம் பெற்று. அக்கல்லூரி முதல்வரானார். பின்னர்ச் சேலம் நகராட்சிக் கல்லூரி முதல்வராய் 1927–ஆம் ஆண்டு பதவியிலமர்ந்து, அக்கல்லூரியின் தலைவராய் இருபத்து மூன்று ஆண்டுகள் பணியாற்றினார். இவர் முதல்வராக இருந்த காலத்தில் கல்வியில் பிற்பட்ட மாணவர்களும் உயர் கல்வி பெறுதற்கு வாய்ப்பாகப் போதிய இடம் ஒதுக்கி அவர்களை ஊக்குவித்தார்.
இராமசாமிக் கவுண்டர் சிறந்த செயலாற்றல் உடைய நிருவாகி. இவர் கணிதப் பேராசிரியராயினும், தமிழ், ஆங்கிலம், வடமொழி ஆகிய மொழிகளில் சிறந்த புலமை பெற்று விளங்கினார். இவர் பாடநூல்கள் எழுதுவதில் வல்லவர். ‘முருகன் வாசகம்’ என்பது இவர் எழுதிய பாடநூல்களுள் குறிப்பிடத்தக்கது. மேலும், நெப்போலியன், நெல்சன் போன்றோரின் வாழ்க்கை நூல்களையும் தொல்காப்பியம் தொடர்பான ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். இவர் பகவத்கீதையைத் தமிழில் பாடல் வடிவில் எழுதியதோடு, ‘கபிலையின் கதை’ என்னும் ஏட்டுச் சுவடியைப் பதிப்பித்தலையும் மேற்கொண்டார். இவர் கலைச்சொல்லாக்கக் குழுவில் உறுப்பினராகப் பணிபுரிந்துள்ளார்.
இவர் சிறந்த இலக்கியப் பேச்சாளர்; தமிழிசை வல்லுநர், தமிழிசை இயக்கம் தோன்றியபோது அதன் ஆராய்ச்சியில் ஈடுபட்டவர்களுள் சேலம் முதல்வரும் ஒருவர். தேவாரம், திருவாய்மொழிப் பாடல்களின் பண்களெல்லாம் வடமொழிப் பெயர்களில் மறைக்கப்பட்டிருப்பதை அறிந்து, தமிழன் இசைக்கருவிகளுள் ஒன்றாகிய முழவினைப் பயிலத் தொடங்கினார். தம் மூத்த மகனுக்கும் அதனைப் பயிற்றுவித்தார்.
இராமசாமி இளமையிலேயே சமயப் பற்று மிக்கவராகவும் முற்போக்குக் கருத்துக்கள் உடையவராகவும் விளங்கினார். இவர் ஈ.வெ.ரா. பெரியார் வழிநின்ற தம் துணைவியாரின் கருத்துரிமையிலோ, செயல் உரிமையிலோ தலையிடாது பெண்ணுரிமையைப் பேணினார். இவர் அனைத்துக் கல்லூரி ஆசிரியர் மாநாட்டை 1948–இல் கூட்டியதோடு. கல்லூரி ஆசிரியச் சங்கம் அமையவும் பெருமுயற்சி செய்தார். மேலும், இச்சங்கத்தின் துணைத் தலைவராகப் பொறுப்பேற்றும் பணி புரிந்தார்.
சிறந்த கணித அறிஞராகவும் தமிழ்ப் பற்றாளராகவும் முற்போக்குக் கருத்து உடையவராகவும் விளங்கிய இராமசாமி, 19.8.1950–இல் காலமானார். தி.வை.சொ.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 112)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/hffag4e4/
தமிழ்“இராமசாமிக் கவுண்டர், ஆ”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/hffag4e4/APA
Oliyon Research. (2026). இராமசாமிக் கவுண்டர், ஆ. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/hffag4e4/MLA
"இராமசாமிக் கவுண்டர், ஆ." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/hffag4e4/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment