பஞ்சகலைகள்
pañcakalaikaḷ
பொருள்கள் · Senses
1.
ஐந்துகலைகள். சைவ ஆகமங்களின்படி உலகம் 5 பகுதிகளில் அடங்கியுள்ளது. அப்பகுதிகள் கலை எனப்படும். அவையாவன; நிவர்த்தி, பிரதிட்டை, வித்தை, சாந்தி, அதீதை ஒவ்வொரு கலையிலும் படைப்பவன், காப்பவன் என்பவரோடு கூடஅழிப்பவனாகிய உருத்திரனும் இருப்பான். கீழக்கீழ் உள்ளவை மேன்மேல் உள்ளவரால் படைக்கவும் அழிக்கவும்படும். இக்கலைகள் உள்ள உலகங்களாகக் கீழிருந்து ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொன்றாக அழிந்து வரும். எல்லாவற்றிற்கும் மேலேயுள்ள சாந்திய தீத கலையில் உள்ளது அழிவதே முற்றழிவு. இது உருவ சங்காரம் மகாசங்காரம் எனப்படும். இதனைச் செய்பவன் மகாசங்கரன். உலகத்தை மாயையினின்றும் தோற்றுவித்து ஒடுக்குபவனும் அவனே. அயன் படைத்தலைச் செய்பவன் திருமால் நிலைபெறச் செய்பவன், அரன் அழிப்பவன். முற்றழிப்புக் காலத்தில் அரனே உலகைத் தன்னுள் ஒடுக்குகிறான். இக்காலத்தில் அயனும் மாலும் தத்தம் நிலையிலிருந்தால், முற்றழிவு ஏற்படாது. இவர்கள் இருவரும் அரனின் ஏவலால் தத்தம் தொழிலைச் செய்கின்றனர்.
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/hd5t5a27/
தமிழ்“பஞ்சகலைகள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hd5t5a27/APA
Oliyon Research. (2026). பஞ்சகலைகள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/hd5t5a27/MLA
"பஞ்சகலைகள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hd5t5a27/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment