ஒரு நாட்டின் பொருளாதாரத்தில் முதலீடு, நாட்டு வருவாய், நுகர்வு ஆகியவற்றால் ஏற்படும் தாக்கங்களை விளக்கும் கோட்பாடு. முதலீட்டின் வேறுபாடுகள் வருவாயிலும் செலவிலும் மாற்றங்களை உண்டுபண்ணும். இம்மாற்றங்கள் தொடர்ந்து பொருளாதாரத்தில் தாக்கங்களை உண்டாக்கி முதலீட்டு நிலையில் (Level of Investment) உள்ளாற்றலுடைய மாற்றங்களை ஏற்படுத்தும், இத்தகைய சுழற்சியின் படி நிலைகளில் கூடுதல் நிகர முதலீட்டின் விளைவால் கூடும் நாட்டு வருவாய் ஒவ்வொரு கட்டத்திலும் பெருகிக் கொண்டே செல்லும், இவ்வாறு முதலீட்டுக்கும் நாட்டு வருவாய்ப் பெருக்கத்திற்கும் உள்ள “வீதம் பெருக்கி” (Multiplier) எனப்படும். இக்கருத்தை முதன் முதலாக சே.எம். கீன்சு (J.M. Keynes) ஒரு கோட்பாடாக வெளியிட்டார். இவருக்குப்பின் வெளிவந்த புதுமைக் கீனிசியக் (Neo Keynisian) கோட்பாடுகளில் பெருக்கியுடன் ‘முடுக்கி’ (Accelerator) என்ற கருத்துருவும் (Concept) சேர்க்கப்பட்டது. பெருக்கியையும் முடுக்கியையும் இணைத்து சே.ஆர். இக்சு (J.R. Hicks) தம்முடைய வணிகச் சுழற்சி ஆய்வில் உயர்நிலைப் பெருக்கி (Super Multiplier) என்ற கோட்பாட்டை வெளியிட்டார். ‘பெருக்கி’ முதலீட்டின் இறுதிநிலைத் தாக்கத்தினால் நாட்டு வருவாயில் ஏற்படும் முன்னோக்கிய விளைவுகளை விளக்குவது ஆகும். ‘முடுக்கி’ வருமானப் பெருக்கத்தால் நுகர்வுப் பண்டங்களின் தேவையிலும் உற்பத்தியிலும் தாக்கங்கள் ஏற்பட்டு, முதலீட்டில் உண்டாகும் பின்னோக்கிய விளைவுகளை (Feed back Effects) விளக்குவது ஆகும். நாட்டு வருவாய் வீதத்தில் ஏற்படும் வேறுபாடுகள் (Variations) முதலீட்டில் எத்தகைய மாற்றங்களை உண்டுபண்ணும் என்பவற்றை ‘முடுக்கி’ விளக்கும். இதனை வேக வளர்ச்சி என்றும் ஊக்கி என்றும் குறிப்பிடுவர். ‘பெருக்கி’ முதலீட்டினால் வருமானம் பெருகி அதன் வழியாக நுகர்வில் (Investment on Consumption) ஏற்படும் தாக்கங்களைக் காட்டுகிறது. ‘முடுக்கி’ மிகுந்த நுகர்வினால் முதலீட்டில் (Consumption on Investment) ஏற்படும் தாக்கங்களைக் காட்டுகிறது. சே.ஆர். இக்சு தன்னியல்பான முதலீட்டிற்கும் (Autonomous Investment) சமநிலை வெளியீட்டிற்கும் (Equilibrium Output) உள்ள தொடர்பு வீதத்தைக் குறிக்க ‘உயர்நிலைப் பெருக்கி’ என்ற கலைச் சொல்லைப் பயன்படுத்தினார். குறிக்கப்பட்ட ஒரு தன்னியல்பான முதலீட்டு நிலையில் சமநிலை வருவாய் நிலை (Equilibrium Income Level) எவ்வளவு என்பதை உயர்நிலைப் பெருக்கி மூலம் அறியலாம். நிலையான வீதத்தில் (Constant Rate) வெளியீடு பெருகும்போது தன்னியல்பான முதலீட்டின் வளர்ச்சிக்குகந்த வகையில் நகரும் சமநிலை வரையறை செய்யப்படும். பிற காரணிகளால் தாக்கப்படாதிருந்தால் தொடர்ந்து இம்முறை இயங்கும். தொடக்கச் சமநிலை நிலையில் பெருரும் வருவாய் மூன்று கூறுகளைக் கொண்டது. அவையாவன: (1) நிலையான வீதத்தில் பெருகும் தன்னியல்பான முதலீடு, (2) தூண்டப்படும் (Induced) நுகர்வுகள், (3) தூண்டப்படும் முதலீடுகள், இவற்றிலிருந்து பெறப்படும் மொத்த வருவாய் Y = C + I + I ::Y = மொத்த வருவாய் ::C = நுகர்வு ::I = தன்னியல்பான முதலீடு ::I = தூண்டப்படும் முதலீடு நுகர்வுச் செலவில் மாறுதல்கள் ஏற்பட மூல காரணமாயிருப்பவை தன்னியல்பான முதலீட்டின் மாற்றங்களே. நடப்புக் கால (Current Period) நுகர்வில் ஏற்படும் மாறுதல்கள் முந்தைய கால (Previous Period) வருவாயில் ஏற்பட்ட மாற்றங்களோடு தொடர்புடையனவாயிருக்கும். வருவாயில் மாற்றங்கள் ஏற்படும்பொழுது, இறுதி நிலை நுகர்வு நாட்டத்தின் (Marginal Propensity to Consume — MPC = இ.நு.நா.) அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட விழுக்காட்டில் நுகர்வு மாற்றங்களுக்குட்படும். நுகர்வு (C) வருவாய் (Y) ஆகியவற்றின் மூலம் இறுதிநிலை நுகர்வு நாட்டத்தில் மாறுதல் ஏற்படுவது போன்றே இறுதி நிலை முதலீட்டு நாட்டம் (Marginal propensity to Investment — MPI = இ.மு.நா.) குறிப்பிட்ட மொத்த தன்னியல்பான முதலீடு, மொத்த வருவாய் ஆகியவற்றின் மாறும் விகிதம் (Ratio of Change) ஆகும். இறுதிநிலை நுகர்வு நாட்டத்தை ‘a’ எனவும் இறுதிநிலை முதலீடு நாட்டத்தை ‘b’ எனவும் கொண்டால், ::சமநிலை வருவாய் (Y) அல்லது தொகு வருவாய் (Aggregate Income) = ::{| 1—a—b இ.நு.நா. — இ.மு.நா. இயங்கும் பொருளாதாரச் (Dynamic Economy) சேமிப்புக் கெழுவும் (Co-efficient) முதலீட்டுக் கெழுவும் நிலையானவை என்ற எடுகோளின் (Assumption) அடிப்படையில் வருவாயின் வளர்ச்சி வீதம் நிலையான தன்னியல்பான முதலீட்டின் வளர்ச்சி விகிதத்திற்கு ஒத்ததாயிருக்கும். தன்னியல்பான முதலீட்டின் பெருக்கம் (△I) குறிப்பிட்ட ஓர் அளவு பெருகுமானால் ஏற்படும் புதிய சமநிலை வருவாய் (Y’)= ::{| 1—a—b வருவாயில் ஏற்படும் பெருக்கம் (△Y) ::{| 1—a—b || — || I 1—a—b 1—a—b 1—a—b 1–a–b 1–a–b || என்பது உயர்தரப் பெருக்கி ‘K’. a–யும் b–யும் வருவாயின் பின்ன எண்களா (Fractions) யிருக்கும். இவற்றின் மொத்தம் 1–க்குள் அடங்கும். தன்னியல்பான முதலீட்டை உயர்தரப் பெருக்கியினால் பெருக்கிக் (Multiplied by) கிடைப்பது சமநிலை வருவாய்க்குச் சமமாக இருக்கும் என்று இச்சமன்பாடு விளக்குகிறது. எடுத்துக்காட்டாக, ::{| கூடுதலான உரூ. 20 கோடி தன்னியல்பான முதலீடு வருவாயில் உரூ. 100 கோடிப் பெருக்கத்தை உண்டு பண்ணியிருப்பதால் இதில் உயர்தரப் பெருக்கி (K) 10 ஆகும். இக்சின் பகுப்பாய்வின்படி உயர்தரப் பெருக்கியைத் தன்னியல்பான முதலீட்டில் செலுத்தி வேறுபட்ட காலங்களின் சமநிலை வருவாயை அறியலாம். இவரது வணிகச் சுழற்சி ஆய்வில் தன்னியல்பான முதலீடு பொருளாதாரத்தில் எப்போதும் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். தன்னியல்பான முதலீடு நிலையான பெருக்கி வீதத்தில் (Geometrical Rate) பெருகும்; பிற இடையூறுகள் ஏற்படாவிடின் பொருளாதாரம் வளரும் சமநிலையில் செல்லும்; தன்னியல்பான முதலீட்டின் வளர்ச்சி விழுக்காட்டு வீதத்தில் வெளியீடு (Output) பெருகும். இவை இக்சின் வணிகச் சுழற்சிக் கோட்பாட்டின் எடுகோள்களாகும். வணிகச் சுழற்சியில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளில் (Fluctuations) தன்னியல்பான முதலீட்டிற்குப் பங்கு இல்லை. அவற்றில் சுழலும் மாற்றங்களை உண்டு பண்ணுவதற்குக் காரணமாகச் செயற்படுவது தூண்டும் முதலீடு (Induced Investment) ஆகும்.