கி.பி. 12–ஆம் நூற்றாண்டில் வாழ்ந்து ‘பிரமய சாரம்’ எனும் நூலை எழுதிய வைணவர். இவரை அருளாளப் பெருமாள் எம்பெருமானார் எனவும் மக்கள் அழைத்தனர். வைணவராவதற்கு முன்னர் ‘யக்ஞ மூர்த்தி’ என்பது இவரது பெயராகும். வேதாந்தியான யக்ஞ மூர்த்தி, விசிட்டாத்துவைதக் கோட்பாட்டினைத் தோற்றுவித்தவரும், உடையவர், எம்பெருமானார் என்னும் சிறப்புப் பெயர்களைப் பெற்றவருமான திருப்பெரும்பூதார் ராமானுசரை (கி.பி. 1017–கி.பி. 1137) எதிர்த்துப் பதினேழு நாள் வாதம் செய்தனர் என்றும், அதன் பின்னர் அவருக்குச் சீடரானார் என்றும் கூறப்படுகிறது. அருளாளப் பெருமாள் ‘ஞான சாரம்’ என்னும் நூலையும் எழுதியுள்ளார். உடையவரின் கட்டளைப்படி திருமாலைத் திரு ஆராதனம் செய்யும் உரிமை பெற்று விளங்கினார். இவர், கி.பி. 14–ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் என்றும் கூறப்படுகிறார்.த.கோ.