ஒரு பொருளுக்கு எதிராக விசையை ஏற்படுத்தி, அப்பொருளை நகர்த்துவதைச் செலுத்தம் (propulsion) எனலாம். ஒவ்வொரு செயலுக்கும், அதே அளவான எதிர்ச் செயல் ஏற்படும் என்ற நியூட்டனின் மூன்றாம் விதியை ஒட்டி ஏற்பட்ட எதிர்த் தாக்குக் கொள்கையை உள்ளடக்கியதே செலுத்தம் ஆகும். <!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் கடைசியில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.----> செலுத்தக் கொள்கை. நியூட்டனின் இரண்டாம் விதிப் படி, பொருண்மை வேகத்தில் (momentum) ஏற்படும் எந்த மாற்றமும், ஓர் உருவத்தின் மீது செலுத்தப்பட்ட செலுத்த விசைக்குச் சமமாக இருக்கும். காட்டாக, படம் 1இல் உள்ள அமைப்பைக் கூறலாம். இது ஒரு பக்கம் சிறிய துளையுடனும், உள்பக்கம் வெற்றிடமாகவும் உள்ள ஒரு பந்தைப் போன்றது. இதன் உள்ளே உயர் அழுத்தத்தில் வளிமத்தை நிரப்பினால், வெற்றிட உட்புறத்தில் வளிமத்தின் அழுத்தம் தாக்கப் படும். அதே வேளையில், சிறிய துளை வழியாக வளிமம் மிக விரைவில் வெளியேறும். இதனால், துளையின் நேர் எதிராக A என்ற பரப்பில் வளிம அழுத்தம் தாக்கும். அந்- நிலையில் ஏனைய பக்கங்களில் ஏற்படும் வளிம அழுத்தங்கள் ஒன்றுக்கொன்று சமமாகி விடும். இறுதியில் எஞ்சியுள்ள விசை, படத்தில் காட்டப்பட்டுள்ள திசையில் தாக்கும். ஓர் ஏவுகணை, வளி மண்டலத்தை விட, வெற்றிடத்தில் உயர் உந்தத்தைப் பெறுகிறது என்பதை இதன் மூலம் அறியலாம். விமான இறக்கைகளின் மேல் செல்லும் காற்றின் மீது, கீழ் நோக்கிய உந்தம் ஏற்படுகிறது. இதனால், மேல் நோக்கிய எதிர்த் தாக்கு விசை ஏற்பட்டு, விமானம் தூக்கப் படுகிறது. உந்து விசை. ஓர் ஊர்தி ஏற்படுத்தும் உந்தத்தின் அடிப்படையில் செலுத்தத் திறனை அளக்கலாம். செலுத்தப் பொறி உட்கொள்ளும் வளிமம், நீர் போன்றவற்றின் அழுத்தத்தைக் கணக்கில் கொள்ளாமல், செலுத்தக் கருவிகளால் ஏற்படும் இறுதி உந்துதலைச் சமன்பாடு 1இல் காணலாம். செயல் திறன். செலுத்த ஆற்றலால் வகுக்கப் பட்ட, பயனாகும் உந்த ஆற்றலே செலுத்தச் செயல் திறன் என்று வரையறுக்கப் படுகிறது. தன் எரி பொருள் நுகர்வு (specific fuel consumption) உந்தத்தைச் சமன்பாடு (3)இல் காணலாம். SFC = \frac {W_f g_0}{F} & = g_0 \frac {W_f}{W_a} \frac {1}{\big[ \big( 1 + \frac {W_r}{W_a}\big) V_e - V \big]} \\ & = g_0 \frac {W_f}{W_a} \frac {1}{V_c -V} \end{align} இதில் SFC என்பது எரி பொருளின் பவுண்ட்/நொடி g0 = ஈர்ப்பு ஆற்றலின் முடுக்கம் ≤ 1 என்று இருக்கும். தன் தூண்டுகைச் சமன்பாடு (4) இல் காணலாம். வளிமத்தைப் பயன்படுத்தும் வேதிச் செலுத்த அமைப்பில், நிலக்கரி, பெட்ரோல் அல்லது மண்ணெண்ணெய் போன்ற ஹைட்ரோகார்பனை எரி பொருளாகவும், வளிமத்தை எரியூட்டியாகவும் பயன்படுத்தலாம். —டி. இந்திரன் நூலோதி. John D. Anderson, Introduction to Flight, McGraw-Hill Book Company, New York, 1978,