துத்தநாக அணு ஒன்றுடன், இரண்டு ஆக்சிஜன் அணுக்கள் இணைந்து கிடைக்கும் அயனியே சிங்கேட் ஆகும். இதன் வாய்பாடு ZnO. இந்த அயனி இரண்டு எதிர் மின்னேற்றத்தைப் பெற்றுள்ளது. இவ்வயனி துத்தநாக ஹைட்ராக்சைடு சேர்மத்திலிருந்து பெறப்படுகிறது. துத்தநாக ஹைட்ராக்சைடு கரைசலுடன், அதிக அளவு சோடியம் ஹைட்ராக்சைடு கரைசலைச் சேர்த்தால், சோடியம் சிங்கேட்டாக இது கிடைக்கும். Zn(OH) + 2NaOH ⟶ NaZnO + 2HO இவ்வினையில், பொட்டாசியம் ஹைட்ராக்சைடு கரைசலைச் சேர்த்தால், பொட்டாசியம் சிங்கேட் கிடைக்கும். சிங்கேட் அயனி HZnO என்ற துத்தநாகத்தின் வலிமை குன்றிய ஆக்சி அமிலத்திலிருந்து பெறப்பட்டதாகக் கொள்ளலாம். எனவேதான், இவ்வுப்புக் கரைசல் காரத் தன்மையைப் பெற்றுள்ளது. இவ்வுப்புகளை நீரில் கரைக்கும் போது, அவை எளிதில் நீராற் பகுக்கப்பட்டு, கரைசலில் ஹைட்ராக்சைடு அயனியின் செறிவை மிகையாக்குகின்றன. இதனால் சிங்கேட் உப்புக் கரைசல் காரமாக உள்ளது. NaZnO + HO ⇄ 2NaOH + Zn(OH) சோடியம் அல்லது பொட்டாசியம் ஹைட்ராக்சைடிற்குப் பதிலாக, அம்மோனியாவைப் பயன்படுத்தினால், அம்மோனியம் சிங்கேட் கிடைப்பதில்லை. மாறாக, துத்தநாகமும், அம்மோனியாவும் அணைவு அயனியையே உண்டாக்குகின்றன. Zn + 4NH ⟶ [Zn(NH)] —பி.ஈ.எம். லியாகத் அலிகான்