நுண்ணோக்கு நுண் கூறாக்கு விளைவு
nuṇṇōkku nuṇ kūṟākku viḷaivu
மீச்சிறு தொலைவுகளில், பருப் பொருள் (matter) மற்றும் கதிர் வீச்சுகளின் தன்மைகளுக்கான தனித் தனி மதிப்புகள் பற்றியது.
மீச்சிறு தொலைவுகளில், பருப் பொருள் (matter) மற்றும் கதிர் வீச்சுகளின் தன்மைகளுக்கான தனித் தனி மதிப்புகள் பற்றியது. நுண்ணோக்கு நுண் கூறாக்கு விளைவு (microscopic quantisation effect) ஆகும். மேலும், குவாண்டம் எந்திரவியலின் படி, இத்தகைய தன்மைகளை முன் உரைப்பதுமாகும்.
மின்காந்தக் கதிர் வீச்சு மூலக் கூறுகள், அணுக்கள், அணுக் கருக்கள் ஆகியவற்றின் தனித் தனி ஆற்றல் மட்டங்கள் மற்றும் கோண உந்தங்கள் ஆகிய தன்மைகள் குவாண்டம் எந்திரவியலின் மூலம் நன்றாக விவரித்து, உரைக்கப் பட்டுள்ளன. மேலும், மீஉயர் பாய்மங்களின் (super fluids) ஓட்ட அமைப்புகளும், குவாண்டம் நிபந்தனைகளுக்கு உட்பட்டுச் செயல் படுகின்றன. இவை தவிர, பருப் பொருளின் மீச்சிறு அமைப்பில், பல குறிப்பிட்ட பகுதிகள் நுண்ணோக்கு நுண் கூறாக்கு விளைவுகள் என்று கருதப் படுகின்றன. இப்பகுதிகள் எதிர் காலத்தில் மேலும், விரிவாக்கமும், மேம்பாடும், திருத்தங்களும் செய்யப் பட்ட புதிய குவாண்டம் எந்திரவியல் கருத்தினால் விளக்கப் படக் கூடும் என்று எதிர் பாக்கப் படுகின்றது. இவ்வாறு, ஒரு புதிய கொள்கையினால் விளக்கத்தினை எதிர் நோக்கியுள்ள சில கூறுகளாகப் பின் வருவன அமையும். அவை, அடிப்படைத் துகள்கள் இருப்பது அவற்றின் நிறைகள், மின்னூட்டங்கள், அவற்றுடன் செறிந்துள்ள கோண உந்தங்கள் முதலியன ஆகும்.
குவாண்டம் எந்திரவியல் நிபந்தனைகளுக்கு உட்படும் தன்மைகள் அனைத்தும், பிளாங்க் மாறிலி h–ஆல் பெருக்கப் படுகின்றன. இம்மாறிலிகள் மதிப்பு 6.625X10-34 ஜுல்–நொடி. இது மிகச் சிறியதாகையால், நுண்ணோக்கு நுண் கூறாக்கு விளைவுகளைத் தகுந்த ஆய் கருவிகளின் உதவியின்றிக் காண முடியாது. இருப்பினும், மிக அதிகமான துகள்களின் ஒன்று பட்ட கூட்டுறவுச் செயற்பாடுகள் இவ்வாறான விளைவுகளில் தோன்றலாம். காட்டாக, மீ உயர் பாய்மங்களின் சுழல்கள் (vertices) இவ்வாறு குவாண்டம் நிபந்தனைகளுக்கு உட்பட்டு, ஒன்று பட்ட கூட்டுறவு முறையில் செயற்படுகின்றன. —ப. தர்மலிங்கம்
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 14, பக். 86)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/gzpga6eq/
தமிழ்“நுண்ணோக்கு நுண் கூறாக்கு விளைவு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/gzpga6eq/APA
Oliyon Research. (2026). நுண்ணோக்கு நுண் கூறாக்கு விளைவு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/gzpga6eq/MLA
"நுண்ணோக்கு நுண் கூறாக்கு விளைவு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/gzpga6eq/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment