அமெரிக்க ஐக்கிய நாடுகளின் மாநிலங்களுள் ஒன்றான நிவாடாவில் பாயும் மிக நீளமான ஆறாகும். இந்த ஆறு அம்மாநிலத்தின் தென்மேற்காக 467 கி.மீ. தொலைவு ஓடுகிறது. இந்த ஆறு வடமேற்கு நிவாடாவில் உள்ள எல்கோ மாவட்டத்தில் தோன்றி, இம்மாநிலத்தின் மேற்குப் பகுதியிலுள்ள அம்போல்டு ஏரியில் கலக்கிறது. இந்த ஆறு ஓடிவரும்போது அல்கலி என்னும் காரப்பொருளைக் கரைத்துக் கொண்டு வருவதால், அம்போல்டு ஏரி உப்புநீர் ஏரியாக உள்ளது. ஆற்றுநீரைக் கொண்டு பள்ளத்தாக்கின் பகுதிகளில் நீர்ப்பாசனம் நடைபெறுவதால் இப்பகுதி பண்ணைத் தொழிலுக்கு ஏற்றதாகும். ஆற்றின் பள்ளத்தாக்கில் இரண்டு இருப்புப் பாதைத் தொடர்கள், கிழக்கிலிருந்து மேற்காக அமைக்கப்பெற்று, நிவாடா மலைப்பகுதிகளைக் கடக்கப் பயன்படுகின்றன.