ஒத்ததிர்வும் அதிர்வியையும்
ottatirvum atirviyaiyum
பொருள்கள் · Senses
1.
வானொலிச் செலுத்தி அல்லது பெறுவியைக் குறிப்பிட்ட அதிர்வெண்ணில் இயங்கச் செய்வதற்கு அதிர் வியைபு (டியூனிங்) என்று பெயர். அதாவது, அதற்குக் குறிப்பிட்ட அதிர்வெண்ணிற்கேற்ப , ஒத்ததிர்வு (ரெசொனன்ஸ்) ஏற்படுமாறு செய்யப்படுகிறது. ஒவ்வொரு வானொலிப் பெட்டியிலும் அதிர்வியைவுப் பகுதி ஒன்றுண்டு. இதற்கு மின்நிலைமமும் (இண்டக்டன்ஸ்) குறிப்பிட்ட அளவுண்டு. ஒரு மாறுமின்னேற்பி இதனோடு தொடராகவோ பக்கமாகவோ இணைக்கப்பட்டிருக்கும். கம்பிச்சுருளின் மின்நிலைமம் நிலையானது. மின்னேற்பியின் ஏற்புத்திறன் மாறக் கூடியது. தேவைப்படும் நிலையத்திலிருந்து வரும் அலைகளுக்கேற்ப, மின்னேற்பியில் தகுதி வாய்ந்த ஏற்புத்திறனை அடையும் பொழுது, மின்சார ஒத்ததிர்வு ஏற்படுகிறது. இவற்றை எல்லாம் ஒரு வாய்பாடு மூலம் குறிப்பிடலாம் f- அதிர்வெண் L-மின்நிலைமம், C - ஏற்புத்திறன் பல்வேறு அலைகள், அலை வாங்கியை அடைந்து மின் தூண்டலை ஏற்படுத்தினாலும், நமக்கு வேண்டிய ஒரே ஒரு நிலையத்தின் அதிர்வை மட்டும் பெற இயலும். பின் இந்த அலையானது படிகத்தினால் திருத்தப்படுகிறது, கேட்கும் நிலை பெறுகிறது. (இய),
— resonance and tuning
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/gvq2bkjj/
தமிழ்“ஒத்ததிர்வும் அதிர்வியையும்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gvq2bkjj/APA
Oliyon Research. (2026). ஒத்ததிர்வும் அதிர்வியையும். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/gvq2bkjj/MLA
"ஒத்ததிர்வும் அதிர்வியையும்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gvq2bkjj/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment