சுழல் ஆரம்
cuḻal āram
ஓர் உருவத்தின் நிறைக்கும், அதன் நிலைமத் திருப்புத் திறனுக்கும் இடையில் உள்ள தொடர்பு சுழல் ஆரம் (radius of gyration) ஆகும்.
ஓர் உருவத்தின் நிறைக்கும், அதன் நிலைமத் திருப்புத் திறனுக்கும் இடையில் உள்ள தொடர்பு சுழல் ஆரம் (radius of gyration) ஆகும். M நிறை கொண்ட ஒரு பொருளின் ஓர் அச்சைப் பொறுத்த நிலைமத் திருப்புத் திறன் I என்றால், அதன் சுழல் ஆரம் fs|80%|k= \sqrt \frac{I}{M} அல்லது I = k²M. இச்சமன்பாடுகளின் kஇன் அலகு மீட்டர் வடிவியல் தன்மையில் ஒத்துள்ள பொருள்களின் ஒத்த நிறை மைய அச்சுகளைப் பொறுத்த சுழல் ஆரங்கள் சமமாக இருக்கும். ஒரு நிறை மைய அச்சைப் பொறுத்து, ஓர் உருவத்தின் சுழல் ஆரம் (k). அந்த அச்சுக்கு இணையான வேறு ஒரு நிறை மைய அச்சைப் பொறுத்த சுழல் ஆரம் (K) எனில், k²=K² + D². இங்கு D என்பது இரண்டு இணை அச்சுகளுக்கும் இடையில் உள்ள தொலைவு ஆகும்.
ஒரு பொருள் இடப் பெயர்ச்சி இயக்கத்தில் ஈடுபடும் போது, அப்பொருளின் நிலைமம், முழுமையாக அதன் நிறையை மட்டுமே பொறுத்து அமையும். எனவே, அந்த நிலைமம் நிறையின் அடிப்படையில் அளக்கப்படும். ஆனால், பொருள் சுழற்சி இயக்கத்தில் ஈடுபடும் போது, சுழல் நிலைமம், பொருளின் நிறையை மட்டுமன்றிச் சுழல் அச்சிலிருந்து அப்பொருளின் துகள்கள் அமைந்துள்ள பயனுறு தொலைவையும் பொறுத்துள்ளது. இந்தச் சுழல் நிலைமமே, நிலைமத் திருப்புத் திறன் எனவும் குறிப்பிடப்படுகிறது. இந்தப் பயனுறு தொலைவு சுழல், ஆரம் ஆகும். அது பொருளில் அடங்கிய துகள்கள், சுழல் அச்சிலிருந்து அமைந்துள்ள தொலைவுகளின் சராசரி இரு மடியின், இரு மடி மூலத்திற்குச் சமம் ஆகும்.
ஒரு பொருளின் நிறை முழுதும், ஒரு குறிப்பிட்ட புள்ளியில் செறிந்திருப்பகாகக் கொள்ளலாம். சுழல் அச்சிலிருந்து அப்புள்ளி அமையும் தொலைவு, அப்பொருளின் சுழல் ஆரம் ஆகும். சுழல் அச்சின் திசையோ, இடமோ மாறினால், பொருளின் துகள்கள் அமைந்திருக்கிற தொலைவுகளும் மாறி விடும். எனவே, அவற்றின் பயனுறு தொலைவும் மாறும். அதாவது, அந்த அச்சைப் பொறுத்த சுழல் ஆரம் மாறி விடும்.
ஒரு பொருளின் மொத்த நிறை மாறாமல், அதன் ஒரு பகுதியிலிருந்து, இன்னொரு பகுதிக்கு நிறை மாற்றப்பட்டாலும், சுழல் ஆரம் மாறும். அதாவது, சுழல் அச்சைப் பொறுத்து, நிறைப் பரவீடு மாறினாலும், சுழல் ஆரம் மாறி விடுகிறது. எனவே, சுழல் ஆரத்தின் மதிப்பு சுழல் அச்சின் இடத்தையும், திசையையும் அந்த அச்சைப் பொறுத்து, நிறைகள் பரவியிருக்கிற பாங்கையும் பொறுத்து அமைகிறது. இதற்கு. மறுதலையாகச் சுழல் ஆரம், ஒரு சுழல் அச்சைப் பொறுத்துப் பொருளில் நிறைகள் பரவியுள்ள பாங்கையும், அதனால், அப்பொருளின் அச்சைப் பொறுத்த நிலைமத் திருப்புத் திறனில் ஏற்படும் விளைவுகளையும் விவரிக்கிறது. —கே. என், ராமச்சந்திரன் நூலோதி. D.S. Mathur, Properties of Matter, S.Chand and Company, New Delhi, 1956.
<!----மேலே உள்ள பிரிக்கும் கோட்டை நீக்க வேண்டாம். முந்தைய தலைப்பு இங்கு முடிவுற்றது. புதிய தலைப்பு அடுத்து ஆரம்பம் ஆகிறது. பக்க ஒருங்கிணைப்பின் போது, தலைப்புகளைப் பிரிக்க இக்கோடு தேவை. ---->
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 10, பக். 538)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/gumzcnsc/
தமிழ்“சுழல் ஆரம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/gumzcnsc/APA
Oliyon Research. (2026). சுழல் ஆரம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/gumzcnsc/MLA
"சுழல் ஆரம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/gumzcnsc/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment