இலட்சுமிபாய், சான்சி இராணி
ilaṭcumipāy, cāṉci irāṇi
இந்தியாவில் கி.பி. 1857–ஆம் ஆண்டில் நடைபெற்ற சிப்பாய்க் கலகம் என்னும் இந்திய விடுதலைப் போரில் பங்கு கொண்ட வீராங்கனை; உயிர்த் தியாகம் செய்த நாட்டுப்பற்றுடையவர்.
இந்தியாவில் கி.பி. 1857–ஆம் ஆண்டில் நடைபெற்ற சிப்பாய்க் கலகம் என்னும் இந்திய விடுதலைப் போரில் பங்கு கொண்ட வீராங்கனை; உயிர்த் தியாகம் செய்த நாட்டுப்பற்றுடையவர்.
இலட்சுமிபாய் (Lakshmi Bai) கி.பி. 1835–ஆம் ஆண்டு நவம்பர்த் திங்கள் 19–ஆம் நாள் உத்தரப் பிரதேசம் வாரணாசியில் பிறந்தார். இவருடைய இயற்பெயர் மணிகர்ணிகா (Manikarnika) என்பதாகும். இவர் தம் தந்தையார் மோரோபந்து தாம்பே (Moropant Tambe); சுணவர் இராசா கங்காதரராவ், தம் கணவர் காலமானதும் அவர் ஆட்சி செய்த சான்சி அரசின் (Jhansi State) பேராளராக ஆண்டார். அதனால், இலட்சுமிபாய் சான்சி இராணி என அழைக்கப்படுகிறார்.
ஆங்கிலேயர் இலட்சுமிபாயை அரசியாக ஏற்க மறுத்தனர்; அவர்தம் ஏற்புமகன் தாமோதர ராவையும் அரசராக ஏற்க அவர்கள் ஒப்புக் கொள்ள வில்லை. தம் அரசைப் பறித்துக்கொண்ட ஆங்கிலேயரின் ஆட்சிக்கெதிராக இலட்சுமிபாய் வாளேந்தினார். சான்சியில் இருந்த ஆங்கிலப் படையைத் தாக்கி அவர்களை, கி.பி. 1857–ஆம் ஆண்டு சூன் மாதத்தில் விரட்டியடித்தார். மவுராணிப்பூர் (Mauranipur), பர்வாசாகர் (Barwasagar) போன்றவிடங்களிலும் ஆங்கிலப் படைகள் தோற்கடிக்கப்பட்டன அதன் விளைவாக, கி.பி. 1857–ஆம் ஆண்டு நிகழ்ந்த பெரும் கலகத்தின் தனிப்பெரும் தலைவியாக, திறன் மிக்க வீராங்கனையாகக் கருதப்பட்டார்.
பன்பூர் (Banpur), சாகர் (Shahgarh) போன்ற பகுதிகளின் அரசர்கள் இலட்சுமிபாயுடன் இணைந்து கொண்டமையால் அவருடைய படை பலம் மேலும் பெருசி வளர்ந்தது. இப்பகுதிகள் பண்டேல்கண்டைச் சார்ந்தவை. ஆங்கிலப் படைகள் சர் இயூகுராசு (Sir Hugh Ross) என்பாரின் தலைமையில் இலட்சுமிபாயைத் தாக்க முற்பட்டபோது, அவர் சிறிதும் அஞ்சாமல் எதிர்த்துப் போரிட்டார். இரு வாரங்கள் இடையறாது நிகழ்ந்த இப்போரினைச் தாக்குப்பிடிக்க முடியாத ஆங்கிலேயப் படையின் அழுத்தத்தால், இலட்சுமிபாய் கால்பி (kalpi) என்னும் ஊருக்குத் தப்பிச் செல்லவேண்டியவரானார். இராவ்சாகிபு (Rao Saheb), தாத்தியா தோப்பே (Tatya Tope) ஆகியோரின் படைகள் கால்பியில் இவருடன் இணைந்துகொண்டன. அவர்களின் கூட்டுப்படைகள் கூஞ்சு (Koonch), கால்பி போன்ற இடங்களில் நடைபெற்ற போர்களில் கடுமையாகப் போரிட்டன.
இலட்சுமிபாய் குவாலியருக்குச் சென்று பேசுவாவின் அதிகாரத்தை அங்கு நிலைநாட்டினார். அவரைப் பின்தொடர்ந்து ஆங்கிலப்படை சென்றது. அவர் ஆண் உடை தரித்துத் தம் படைவீரர்களுக்குத் தலைமை தாங்கிப் படைகளை வழிநடத்தினார். படைப்பலத்திலும், திறமையிலும் தம்மைவிடச் சிறந்திருந்த ஆங்கிலப் படைகளை வீரமாகவும் தீரமாகவும் எதிர்த்துச் சாடினார். குவாலியரில் கோட்டா–கி–சராய் (Kota–Ki–sarai) என்னும் பகுதியில் கி.பி. 1858–சூன் மாதம் 18–ஆம் நாள் நடைபெற்ற போரில் இலட்சுமிபாய் வீரமரணமுற்றார். இப்பகுதிக்கு அண்மையில் இருந்த பாபா கங்கா தாசு (Baba Ganga Das) என்பாரின் தோட்டத்தில் இலட்சுமிபாயின் உடல் எரியூட்டப்பட்டது. அந்த இடம் இக்காலத்தில் ‘பூல் பாக்’ எனப்படுகிறது. மலர்ப் பூங்கா என்பது அதன் பொருள். இந்தியா 1947–இல் விடுதலை அடைந்தபின் இலட்சுமிபாயின் வீரதீரச் செயல்களையும் தியாகத்தையும் போற்றிப் பாராட்டும் வகையில் நினைவுச் சின்னம் ஒன்று கட்டப்பெற்றுள்ளது.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 325)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/gqpxz5fr/
தமிழ்“இலட்சுமிபாய், சான்சி இராணி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/gqpxz5fr/APA
Oliyon Research. (2026). இலட்சுமிபாய், சான்சி இராணி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/gqpxz5fr/MLA
"இலட்சுமிபாய், சான்சி இராணி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/gqpxz5fr/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment