அச்சூலியன் கைக் கோடரி அச்சூல் பிரான்சின் சோம் பள்ளத்தாக்கிலுள்ள ஓர் ஊர். இது புனிதஅச்சூல் (St. Acheul) என்றும் சொல்லப்படும். இவ்வூரில் கண்டெடுக்கப்பட்ட கைக் கோடரிகள் அச்சூலியன் கைக் கோடரிகள் எனப்படும். இந்தக் கைக்கோடரிகள் அபிவில்லியன் கைக் கோடரிகளைக் காட்டிலும் தரத்திலும் செயல்திறத்திலும் உயர்ந்தவை. வழவழப்பு மிக்க கூர்மையான தாக்குவிசைப் பகுதியை இக்கருவிகள் கொண்டுள்ளன.