சிறுநீர்ப் புறவழி அழற்சி
ciṟunīrp puṟavaḻi aḻaṟci
சிறுநீர்ப் பாதையின் சில பாதிப்புகளால், சிறுநீர்ப் புற வழி அல்லது சிறுநீர்ப் பை மட்டும் தாக்கப்படுகிறது.
சிறுநீர்ப் பாதையின் சில பாதிப்புகளால், சிறுநீர்ப் புற வழி அல்லது சிறுநீர்ப் பை மட்டும் தாக்கப்படுகிறது. பொது உடல் நலப் பாதிப்புகள் குறைவாகவே இருக்கின்றன. அடிக்கடி சிறுநீர் பிரிதலும், சிறுநீர் கழிக்கும் போது வலியும் தோன்றுகின்றன. சிறுநீர்ப் பை அழற்சியின் வலி, பூப்பிணைப்பின் (symphysis pubis) மேலாக, சிறுநீர் கழிக்கும் முன்பும், கழிக்கும் போதும், கழித்த பின்னரும் கடுமையான வலி தோன்றும். சிறுநீர் அருவெறுக்கத் தக்க நாற்றத்துடன் கலங்கலாக இருக்கும். சிறுநீரை ஆய்வு செய்தால், வெள்ளணு, சிவப்பணு, நுண்ணுயிரி, ஆகியவை காணப்படும். சில போது, குருதியும் வெளிப்படும். சிறுநீர்ப் புற வழி அழற்சியின் காரணிகள் பெரும்பாலும் வெட்டை நோய் ஆகும்.
வெட்டை நோய் அழற்சியில், நெய்செரியா கோனோரியா என்ற கிராம் நெகடிவ், இரு கோள நுண்ணுயிரிகள் பங்கு கொள்கின்றன. சிறுநீர்ப் புற வழி மட்டுமன்றி, மலக் குடல், மேல் தொண்டை, கண் ஆகியவையும் பாதிக்கப்படுகின்றன. இந்நோயின் மறை காலம் 2—10 நாளாகும். சிறுநீர்ப் புற வழியின் முன் பகுதியே பாதிக்கப்படுவதால், வலியும், சீழ் வெளிப்பாடும் தோன்றுகின்றன. பெண்களில், கருப்பையின் கழுத்துக் கால்வாய் பாதிக்கப்படுவதால், வலியும், சீழ் வெளிப்பாடும் தோன்றுகின்றன. கிராம் முறைப்படி சாயமேற்றி ஆய்வு செய்தால், செல்லுள் இரு கோள கிராம் நெகடிவ் நுண்ணுயிரிகளைக் காணலாம். இந்நோய் பரவும் போது, உடலின் பல உறுப்புகள் பாதிக்கப்படலாம். காய்ச்சல், மூட்டு வலி, கண் வலி ஆகியன உண்டாகலாம்.
மருத்துவமாக 2.4 கிராம் புரோகைன் பெனிசிலினுடன் 1 கிராம் புரோபெனசைடு கொடுக்கலாம் அல்லது 2 கிராம் ஆம்பிசிலினும் 1 கிராம் புரோபெனசைடும் கொடுக்கலாம், கோ—டிரைமாக்சசோல் 8 மாத்திரைகள் (480 மி. கி.) கொடுப்பதும் பயளிக்கும், கொனேரியா நுண்ணுயிரி அல்லாத சிறுநீர்ப் புற வழி அழற்சியில், மேற்கூறிய அறிகுறிகளே காணப்படுகின்றன. மருத்துவமாக 8000:1, பாதரச ஆக்சிசயனைடைச் சிறுநீர்ப் புற வழியின் உட்செலுத்திக் கழுவ வேண்டும். சில போது, ஆக்சிடெட்ராசைக்ளின், ஸ்பைராமைசீன் போன்ற மருந்துகள் பயனளிக்கின்றன. டிரைகோமோனாஸ் வெஜைனாலிஸ் நுண்ணுயிரிகளும் அழற்சியை உண்டாக்குகின்றன. மருத்துவமாக மெட்ரோனிடசால் மாத்திரை, நாளும் 600 மி.கி. 10—14 நாள் தர வேண்டும். —சாரதா கதிரேசன்
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 10, பக். 355)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/gjg7as9j/
தமிழ்“சிறுநீர்ப் புறவழி அழற்சி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/gjg7as9j/APA
Oliyon Research. (2026). சிறுநீர்ப் புறவழி அழற்சி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/gjg7as9j/MLA
"சிறுநீர்ப் புறவழி அழற்சி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/gjg7as9j/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment