அருகத்து நிலை
arukattu nilai
அருகத்து நிலை பௌத்த சமயத்தில் நான்காவதும், மிகப் புனிதமானதுமான துறவுநிலை.
அருகத்து நிலை பௌத்த சமயத்தில் நான்காவதும், மிகப் புனிதமானதுமான துறவுநிலை. உலக வாழ்வின் நிலையாமையையும் துன்பங்களையும் உணர்ந்து நிர்வாணத்தை நோக்கமாகக் கொண்டு முன்னேறும்போது கடைசியாக உள்ளது இந்நிலையாகும். உலக வாழ்வைத் துறந்து அனுஷ்டிக்க வேண்டிய நான்கு அதீத மார்க்கங்களையும் கடந்து வந்து, அதன் நான்கு பலன்களையும் பெற்று, இப்பிறப்பில் துன்பம் நீங்கி, மறுபிறப்பும் இல்லாத நிலையை அடைவோர் அருகத்து நிலையை அடைந்தவராவர். இவர்கள் ஆரியர் எனவும் அழைக்கப்பெறுவர். அருகத்துநிலையை அடைந்தோரது முக்கியமான சிறப்பியல்பு குறைவற்ற ஞானம். இது பிரஞ்ஞை எனப்படும். பிறவிக் கடலைக் கடக்க இப்பிரஞ்ஞை உதவுகிறது. ஆகையால் இவர்கள் பிரஞ்ஞாவிமுக்தர் எனவும் அழைக்கப்பெறுவர். புத்தரது பிரதம சீடர்கள் அனைவரும் இந்நிலையை அடைந்தோர்.
ஜைன சமயத்திலும் மிக்க வுயர்நிலையடைந்த ஆன்மா, உடலோடு கூடியிருக்கும்போது சயோக கேவலி அல்லது அருகத்து நிலையை எய்தியிருப்பதாகக் கூறுவர்.
மூலம் · source: கலைக்களஞ்சியம் (தமிழ் வளர்ச்சிக் கழகம்) — CC BY-SA 3.0 (தொகுதி 1, பக். 237)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ghdcjypt/
தமிழ்“அருகத்து நிலை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ghdcjypt/APA
Oliyon Research. (2026). அருகத்து நிலை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ghdcjypt/MLA
"அருகத்து நிலை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ghdcjypt/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment