சிரைமடல் அழற்சி
ciraimaṭal aḻaṟci
நாண் உறை அழற்சிக்கு உரிய மருத்துவம் அளிக்காவிடில், விரல்களின் வேலைத் திறன் குறையும்.
நாண் உறை அழற்சிக்கு உரிய மருத்துவம் அளிக்காவிடில், விரல்களின் வேலைத் திறன் குறையும். இது சிரைமடல் அழற்சி எனப்படும். இது தீவிர சிரை மடல் அழற்சி அல்லது திடீர் நாண் உறை அழற்சி என இரு வகைப்படும்.
தீவிர சிரை மடல் அழற்சி, சீழ் உண்டாக்கும் வீரியம் மிக்க பாக்டீரியாக்களாகிய ஸ்ட்ரெப்டோ, ஸ்டெஃபைலோ காக்கஸ் நுண்ணுயிரிகளால் உண்டாகிறது. சிறு காயங்கள், சிறு துளை வழியே சென்று நாண் மற்றும் உறைபாதிப்பை உண்டாக்கும். நரிக்குறத்தியின் உள்ளங்கை விரல்களில் பெரிதும் காணப்படும் இந்நோய் எளிதில் கீழ் நோக்கி உறை வழியே பரவும். சுட்டு, கட்டை விரல்களின் உறையில் தோன்றும் இதை ஆரைக் கிழி எனவும், உட்பக்க மூன்று விரல் உறைகளில் தோன்றுவதை அரந்திக் கிழி எனவும் வகைப்படுத்துவர்.
<!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் துவக்கத்தில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.----> வீக்கம் தோன்றி விரலை மடக்கவோ, நீட்டவோ முடியா நிலையில், காய்ச்சலும், வலியும் மிகும். கையைச் சிறிது அசைத்தாலும் வலிக்கும். உடனடியாக உயிர் எதிர்மருந்து கொடுத்துக் கையைக் கழுவி, வீக்கம் குறையக் கையைத் தூக்கி வைத்துக் கட்டுப் போட வேண்டும். விரல்களை உணர்வறச் செய்து கீறிச் சீழை உடனடியாக வெளிப்படுத்த வேண்டும்.
நாட்பட்ட நாண் உறை அழற்சி காச நோய் நுண்ணுயிரிகளால் தோன்றும்; காயங்களாலும் உண்டாகலாம். இந்நோயில் உறைகள் தடித்துக் காணப்படும். தகுந்த காச நோய் மருந்தை நீண்ட நாள் கொடுக்க வேண்டும். —மா. ஜெ. ஃபிரடெரிக் ஜோசப்
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 10, பக். 265)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ggntjv83/
தமிழ்“சிரைமடல் அழற்சி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/ggntjv83/APA
Oliyon Research. (2026). சிரைமடல் அழற்சி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ggntjv83/MLA
"சிரைமடல் அழற்சி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/ggntjv83/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment