சுருக்குப் பை வலை
curukkup pai valai
தெற்குக் கர்நாடகக் கடலின் மேற்குப் பகுதியில் கூட்டங் கூட்டமாக நகர்கின்ற மீன்களைப் பிடிக்கும் பொருட்டுச் சுருக்குப் பை வலைகள் முதன் முதலாக 1975ஆம் ஆண்டு பயன்படுத்தப் பட்டன.
தெற்குக் கர்நாடகக் கடலின் மேற்குப் பகுதியில் கூட்டங் கூட்டமாக நகர்கின்ற மீன்களைப் பிடிக்கும் பொருட்டுச் சுருக்குப் பை வலைகள் முதன் முதலாக 1975ஆம் ஆண்டு பயன்படுத்தப் பட்டன. . ஏனைய வலைகளை விட இவ்வலை பயன் மிக்கதாக உள்ளது. இந்தியக் கடல்களில் எண்ணெய்ச் சாளை, அசலை போன்ற மீன் இனங்களைப் பிடிப்பதற்கு, இவ்வலைகளே பெரிதும் பயன்படுகின்றன. பெரும்பாலும் 16—20 மீ. ஆழத்திற்கு அப்பால் இவ்வலைகள் பயன்படுகின்றன.
இயக்கும் முறை. இவ்வலையை இயக்குவதற்கு அடிப்படையாக ஒரு பெரிய தாய்த் தோணியும், எடை குறைவான ஒரு துணைத் தோணியும் தேவைப் படுகின்றன. தாய்த் தோணி . 80—120 குதிரை ஆற்றல் கொண்ட எந்திரத்தைக் கொண்டுள்ளது. வலை 450 மீ. நீளத்தையும், 40—45 மீ. அகலத்தையும், 1.5 டன் எடையையும் கொண்டுள்ளது. தாய்த் தோணி, வலையை எடுத்துச் செல்லப் பயன்படுவதோடு, சிறிய தோணியையும், தன் வால் பகுதியில் கட்டிக் கடலுக்குள் இழுத்துச் செல்கிறது. இவ்வலையை இயக்க 12—24 மீனவர்கள் ஒரே சமயம் தேவைப்படுவர்.
மீன் கூட்டத்தைக் கண்டவுடன், துணைத் தோணி பிரிக்கப்படுவதோடு, இரு மீனவர், அத்துணைத் தோணிக்கு மாற்றப்படுவர்; உடனே, வலையின் ஒரு நுனியும், துணைத் தோணிக்கு அனுப்பப்படும். தாய்த் தோணி வலையோடு சென்று, மீன் கூட்டத்தைச் சுற்றி வளைக்கிறது. இவ்வாறு வளைக்கும் போது, தாய்த் தோணியும், துணைத் தோணியும் படத்தில் காட்டியவாறு அருகருகே வந்து விடும். இரு தோணியின் மீனவர்களும், பிடிபட்ட மீன் கூட்ட வலையைத் தோணியிலிருந்து கொண்டு இழுக்கின்றனர். ஒரு சுருக்குப் பை வலையை முழுமையாகச் செயல்படுத்த, ஏறத் தாழ ஒரு மணி நேரம் ஆகும். இவ்வலையின் இயக்கத்தால், ஏறத்தாழ 1000 டன் மீன்கள் பெற வாய்ப்புண்டு. பொதுவாக, மேற்கூறியவாறு எண்ணெய்ச் சாளை, அசலை முதலிய மீன்களைப் பிடிப்பதற்கே இவ்வலை பெரிதும் பயன்படினும், ஏனைய சாளை இனங்கள் பாரை, நெத்திலி, கெழுத்தி போன்றவற்றையும் பிடிப்பதற்குச் சுருக்குப் பை வலை பெரிதும் பயன்படக் கூடும் என ஆய்வின் வழி கண்டறியப்பட்டுள்ளது. —இரா. சந்தானம்
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 10, பக். 515)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/gggkg3za/
தமிழ்“சுருக்குப் பை வலை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/gggkg3za/APA
Oliyon Research. (2026). சுருக்குப் பை வலை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/gggkg3za/MLA
"சுருக்குப் பை வலை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/gggkg3za/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment