இனியவை நாற்பது
iṉiyavai nāṟpatu
பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.
பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. இந்நூலின் ஆசிரியர் மதுரைத் தமிழாசிரியர் மகனார் பூதஞ்சேந்தனார் ஆவர். இவர் சங்க மருவிய காலத்தவராவர். தம் கடவுள் வாழ்த்துப் பாடலில் சிவன், திருமால், பிரம தேவன் ஆகியோரைப் பாடியிருப்பதால், இவர் வைதிக சமயச் சார்புடையவராக இருக்கலாம் என்பதும், சைவ வைணவ வேறுபாடு கருதாதவர் என்பதும் புலனாகின்றன. இவர் பெயரிலமைந்த சேந்தன் என்னும் பெயர் முருகனைக் குறிக்கும் பெயர்களுள் ஒன்றாகும். பிரம தேவனுக்கும் வணக்கம் கூறியிருப்பதால் இவ்வணக்கம் தமிழ் நாட்டில் சிறப்புற்றிருந்தபோது, இந்நூல் இயற்றப் பெற்றிருத்தல் வேண்டும் என்று ஆராய்ச்சியாளர் குறிப்பிடுகின்றனர். மாந்தர் தம் வாழ்வில் கொள்ளத்தகும் இனிய பண்புகள் பலவற்றை இந்நூல் நாற்பது வெண்பாக்களில் தொகுத்துக் கூறுகிறது. நூலின் தொடக்கத்தில் கடவுள் வாழ்த்து தனியாக இடம் பெற்றுள்ளது. நூலின் எட்டாம் பாடல் ஐந்து அடிகளில் பஃறொடை வெண்பாவாக அமைந்துள்ளது. ஒருசில பாடல்கள் நீங்கலாக ஏனைய பாடல்களில் இனிய பண்புகள் மும்மூன்றாகக் கூறியிருத்தலின் இந்நூல் திரிகடுகத்துடன் ஒத்த போக்குடையது என்று கூறலாம். இந்நூல் திரிகடுகத்தின் பொருளமைப்பையும் இன்னாநாற்பதின் நூலமைப்பையும் கொண்டுள்ளது. இந்நூலுக்குச் சிறந்த பழைய உரை ஒன்றுள்ளது. ‘பிறன்கைப் பொருள் வௌவான் வாழ்தல் இனிதே; அறம் புரிந்து அல்லவை நீக்கல் இனிதே’ என்னும் பாங்கில் இந்நூலில் அறங்கள் கூறப்பட்டுள்ளன.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 633)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/g4wr82ck/
தமிழ்“இனியவை நாற்பது”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/g4wr82ck/APA
Oliyon Research. (2026). இனியவை நாற்பது. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/g4wr82ck/MLA
"இனியவை நாற்பது." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/g4wr82ck/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment