அநாகத நாதம் - ஆகத நாதம்
anākata nātam - ākata nātam
கருநாடக இசையில் ஒலி அநாகத நாதம் என்றும் ஆகத நாதம் என்னும் பிரிக்கப்பட்டிருக்கிறது.
கருநாடக இசையில் ஒலி அநாகத நாதம் என்றும் ஆகத நாதம் என்னும் பிரிக்கப்பட்டிருக்கிறது. மனித முயற்சியின்றி இயற்கையிலேயே கேட்கப்படும் ஒலி அநாகத நாதமாகும். மனிதனின் முயற்சியினால் எழுப்பப்படும் ஒலி ஆகத நாதமாகும். நாம் கேட்கும் இசை, பாடும் இசைக்கருவிகளில் வாசிக்கப்படும் இசை ஆகிய இவை ஆகத நாதத்தைச் சேர்ந்தவையாகும்.
அநாகத நாதத்தின் உட்பொருளைப் பண்டைக் காலத்து மெய்யுணர்வாளர்கள் நன்கு அறித்திருந்தார்கள். யோகத்திறனால் உணர்ந்து அனுபவிக்கக் கூடிய இயல்பான அடிப்படை ஒலி என்றும் இதனைக் கொள்ளலாம். விண்வெளியினின்று தனித்துத் தோன்றும் இசையும், நம் உடலில் உற்பத்தியாகும் இசையொலியும் அநாகத நாதம் என்னும் பிரிவைச் சேர்ந்தவையாகும். சிறந்த இயலிசைப் புலவராகத் திகழ்ந்த தியாகையர் ஆகத நாதத்தின் பெருமையை விளக்கிக் காட்டும் நூற்றுக்கணக்கான கீர்த்தனங்களை இயற்றியுள்ளார். இவர் அநாகத நாதத்தை உணர்ந்து தம்முடைய அனுபவங்களைச் “சுரராகசுதார” போன்ற கீர்த்தனங்களில் வெளியிட்டிருக்கிறார். காண்க: இயலிசைப்புலவர்கள், இசை.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 1, பக். 381)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/fz9wqpyt/
தமிழ்“அநாகத நாதம் - ஆகத நாதம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/fz9wqpyt/APA
Oliyon Research. (2026). அநாகத நாதம் - ஆகத நாதம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/fz9wqpyt/MLA
"அநாகத நாதம் - ஆகத நாதம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/fz9wqpyt/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment