அக்குவினசு, தாமசு, தூய
akkuviṉacu, tāmacu, tūya
ஒரு சிறந்த இடைக்காலத் தத்துவ அறிஞர்.
ஒரு சிறந்த இடைக்காலத் தத்துவ அறிஞர். இவர் இத்தாலி நாட்டிலுள்ள ‘இராகாசிகா’ (Rocca-secca) எனும் இடத்தில் பிறந்தார். இவர் நேப்பில்சுப் பல்கலைக்கழகத்தில் தமது படிப்பை முடித்ததும், கி.பி. 1250-இல் தோமினி மடஒழுங்குப் (Dominican Order) போதகராகப் பணிப்பொறுப்பினை ஏற்றுக்கொண்டார். இப்பணிப்பொறுப்பு முடிந்தவுடன் கி.பி. 1256-இல் பாரிசுப் (Paris) பல்கலைக்கழகத்தில் இறையியல் (Theology) பேராசிரியராகச் சிறிது காலம் பணியாற்றினார்.
இப்பணியிலிருந்தபோது இவர் பல நூல்கள் எழுதினார். அவற்றுள் குறிப்பிடத்தக்கவை, ‘சும்மா காண்டிரா சென்டீல்சு’ (Summa Contra Gentiles).
அக்குவினசு, தாமசு, தூய
‘சும்மா தியாலசிக்கா’ (Summa Theologiae) ‘அரசியல் தத்துவம்’ (Political Philosophy) ‘அரிசுடாட்டிலின் அரசியற் கொள்கை’ போன்றவையாகும்.
இந்நூல்களில் சமயம், சட்டம், தத்துவம், அரசியல், கடவுள் ஆகியவற்றைப்பற்றி அக்கிவினசு குறிப்பிட்டுள்ளார். பிற மதத்தவரும் கிறித்தவ சமயத்தில் சேருமாறு இவர் தம் அறிவுரைகளும் கருத்துகளும் அமைந்திருந்தன. புனித தாமசு நம்பிக்கையையும் சிந்தனையையும் ஒருங்கிணைத்தார். அரிசுடாட்டிலின் கருத்துகள் அனைத்தும் நேரடியாகப் புனித தாமசுக்குக் கிடைக்கப் பெறாமையால் அவர் முகமதிய அறிஞர் அவரோசு எழுதிய நூல்களின் இலத்தீன் வடிவங்களிலிருந்து அரிசுடாட்டிலின் கருத்துகளைப் பெற்றார். அவ்வாறு பெறப்பட்ட அரிசுடாட்டிலின் கருத்தை ஒழுங்குபடுத்தித் திருத்தியமைத்து. கிறித்தவச் சமயப்பிரிவில் ஒன்றாகக் கத்தோலிக்கச் சமயத்தை வளர்க்கப் பயன்படுத்தினார்.
இவர் மெய்ப்பொருளியல் உண்மைக் கொள்கையைப் (Realism) பின்பற்றியவர். தத்துவ முறையில் அறிவு எவ்வாறு கிடைக்கப் பெறுகிறது என்பதை இங்குக் கூறியுள்ளார். புலன் அனுபவ அறிவே அறிவின் சிறந்த தொடக்கமாகும் என்பது இவரது கொள்கை. மெய்ப்பொருளியலில் புலன் கடந்த மெய்ப்பொருளை விளக்குமிடத்துத் தூய தாமசு ஓர் உண்மைக் கொள்கையினராகத் (Realist) திகழ்கிறார். அதே சமயம் கடவுள் நம்பிக்கை உள்ளவராகவும் காணப்படுகிறார். “உண்மை என்பதை எவ்வாறு முறைப்படுத்திக் கூறினும், யார் யாரால் அது பேசப்படினும், அது கடவுளின் தூய ஆவியால் பேசப்படுகிறது” என்று தூய தாமசு அக்குவினசு மெய்ப்பொருளியல் உண்மையினைப்பற்றிக் குறிப்பிடுகிறார். இதுவே அக்குவினசின் கத்தோலிக்கச் சமயக் கொள்கையாகும்.
மக்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பதையே விரும்புகிறார்கள். அம்மகிழ்ச்சி இறைவனுடன் ஒன்று பட்டுணர்தல் வாயிலாகவே கிடைக்கும். அதனைத் தான் கிறித்தவர்கள் விரும்புகிறார்கள் என்று அக்குவினசு (Aquinas, St. Thomas) குறிப்பிட்டுள்ளார்.
கடவுள் முழுமுதற்பொருள். அவர் மக்களுக்கு அருள்புரிகிறார். அவ்வருளின் மூலமாக மக்களின் நோக்கங்கள் நிறைவேறுகின்றன. மேலும், கடவுள் மறைமுகமாக மக்களுக்கு உதவிபுரிகிறார். அவரே இப்பூவுலகைப் படைத்தவரும், மக்களைக் காப்பாற்றுபவரும், உலகச் செயல்களைக் கவனிப்பவரும் ஆவர். இதுவே தூய தாமசின் இறையியற் கொள்கை. இவர் அரசு பற்றியும் குறிப்பிட்டுள்ளார். அரசு, மக்களின் நலனுக்காகச் செயல்பட வேண்டும்; மக்களின் உரிமை, வாழ்க்கை, சமயம், கல்வி ஆகியவற்றில் அது கவனம் செலுத்திப் பேணிப் பாதுகாத்திடல் வேண்டும். அத்தகைய அரசே சிறந்த அரசாகக் கருதப்படும். அரசு மக்களைத் தவறான செயலில் ஈடுபடுத்தல் கூடாது என்றும், மக்களின் நலன்களே அரசின் கடமை என்றும் இவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்தின் சட்டங்கள் இயற்கையோடு ஒட்டியவை; அழிவில்லாதவை. உலகியல் சட்டத்தை நிறுவுவதற்கு அரசுச் சட்டங்கள் உதவ வேண்டும். இவ்வரசின் சட்டம் இறைவனின் சட்ட விதிகளுக்கு (Divine law) முரண்படாத வண்ணம் இயற்றப்பட வேண்டும் என இவர் குறிப்பிட்டுள்ளார்.
இடைக்காலத்தில் தாந்தே (Dante) என்னும் அறிஞர், தமது “தெய்விக இன்பியல்” (Divina commedia) என்ற நாடகத்தில், தாமசு அக்குலினசை “தெய்வ ஞானக் கனற்பிழம்பு” (The flame of Heavenly wisdom) என்று குறிப்பிட்டுள்ளார். அக்குவினசு கி.பி. 1323-ஆம் ஆண்டு தூய அடிகளாக (Saint) அறிவிக்கப்பட்டார். ஒவ்வோர் ஆண்டிலும் மார்ச்சு 7-ஆம் நாள் இவரது நினைவு நாளாகக் கொண்டாடப்படுகிறது. மு.மு.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 1, பக். 48)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/fvm8rm4r/
தமிழ்“அக்குவினசு, தாமசு, தூய”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/fvm8rm4r/APA
Oliyon Research. (2026). அக்குவினசு, தாமசு, தூய. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/fvm8rm4r/MLA
"அக்குவினசு, தாமசு, தூய." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/fvm8rm4r/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment