காக்காய் வலிப்பு

kākkāy valippu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மூளை ஒரு கணிப்பொறி போன்றது. கணிப்பொறி போலவே, மூளை அணுக்கள் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டள்ளன. மின்னணு வேகத்தில் உடலின் எல்லாப் பகுதிகளுக்கும் தொடர்பு கொள்கின்றன. சில வேளைகளில் மூளையில் வழக்கத்திற்கு மாறாக அதிர்ச்சி ஏற்படுகின்றன. இதனை 'வலிப்பு' என்கிறோம், மூளையிலிருந்து கட்டுக்கடங்காமல் மின்காந்த ஆற்றல் வெளிப்படும் போது இந்த வலிப்பு உண்டாகிறது. மூளை விரைவிலேயே இயல்புநிலைக்கு வந்துவிடுவதால் வலிப்பு நோயாளிகள் இயல்பாக எந்த நோய்க் குறிகளும் தென்படுவதில்லை. வலிப்பு நோயில் பலவகைகள் உண்டு சாப்பிடும்போது வலிப்பு வந்தால் அது 'சாப்பாட்டு வலிப்பு (Eating epilepsy) எனப்படும்; சிரிக்கும்போது ஏற்படும் வலிப்பு (Laughing epilepsy) ஆகும்; சிலர் வெந்நீரைத் தொட்டால் வலிப்பு வரும் அது "வெந்நீர் வலிப்பு". இந்நோயாளிகள் ஊர்திகள் ஒட்டுவதையும், ஆறு, குளங்களில் குளிப்பதையும், வன்முறைக் காட்சிகள் நிறைந்த திரைப்படங்களையும், தொலைக் காட்சி நிகழ்ச்சிகளையும் பார்ப்பதையும், கூரியமுனைகளை உடைய பொருள்களைக் கையாள்வதைத் தவிர்ப்பது நல்லது. நன்கு உறங்குதல், சமச்சீருணவு உண்ணுதல், குறிப்பிட்ட மருத்துவக் கவனிப்பு, சிறந்த பொழுது போக்கு ஆகியவை மிகுந்த நலன் பயக்கும். — epilepsy
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: வலிப்பு நோய், இசிவு நோய் · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 434)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/fvkc4svf/

தமிழ்
“காக்காய் வலிப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fvkc4svf/
APA
Oliyon Research. (2026). காக்காய் வலிப்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/fvkc4svf/
MLA
"காக்காய் வலிப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fvkc4svf/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment