நெட்டி
neṭṭi
இதனைக் கிடைச்சி, சடை, சிடை, நெல்லி தள்ளி என்று கூறுவதுண்டு.
இதனைக் கிடைச்சி, சடை, சிடை, நெல்லி தள்ளி என்று கூறுவதுண்டு. இதன் தாவரப் பெயர் ஏஸ்கினோமேன் இண்டிகா (Aeschynomene indica) ஆகும். லெகுமினோசிக் குடும்பத்தைச் சேர்ந்த, இது கால்வாய், ஏரி, குளங்கள் ஆகியவற்றின் ஓரங்களில் வளர்ந்து காணப் படும். மியான்மரிலும், இந்தியாவில் அஸ்ஸாம், மேற்கு வங்காளம் மற்றும் தென் மாநிலங்களிலும் இதனைக் காணலாம். கடற்கரை மட்டத்திலிருந்து மலைப் பகுதியில் 750 மீ. உயரம் வரையில் காணப் படும் இச்செடியின் தக்கை விலை குறைந்தது.
<!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் கடைசியில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப் படுகிறது.----> அமைப்பு. நேராக 1மீ. உயரம் வளரும் இதன் தண்டு மென்மையானது; மரக் கட்டை போன்றது. கிளைத்து வளரும் தன்மை கொண்டது. இலைகள் 10 செ.மீ. நீளமுள்ளவை. நீள் சதுரமான ஒவ்வோர் இலையிலும் 15–25 இரட்டைச் சிற்றிலைகள் இருக்கின்றன. இலையோரம் முழுமையானது. இலைக் காம்பு 7 மி.மீ. நீளமுடையது. இலையடிச் செதில்கள் 1 செ.மீ அளவிலும், நுனி கூராயுமிருக்கும். மஞ்சரி 2 செ.மீ. நீளத் துணர் (raceme) வகையாகும். சில சமயங்களில், பூக்கள் தனியாக உண்டாகியிருக்கும். மஞ்சரிக் காம்பு பளபளப்பாக 1.5 செ.மீ. நீளத்திலிருக்கும். பூக்காம்பு 5 மி.மீ. நீளமானது. ஒவ்வொரு பூவின் குறுக்களவும் 6 மி.மீ. நீளமானது.
புல்லி வட்டக் குழல் மயிரற்ற 3.5 செ.மீ. நீளத்திலிருக்கும். புல்லி வட்டம் ஆழமான இரு கதுப்புகளுடனிருக்கும். மேல் கதுப்பு 4 மி.மீ. நீளமும் கீழ்க் கதுப்பு 5 மி.மீ. நீளமும் உடையன. அல்லிகள் மஞ்சள் நிறங்கொண்டவை. கொடி அல்லி மி.மீ. அளவிலும், இறகு அல்லி 6X3 மி.மீ. அளவிலும், படகு அல்லி 7X3 மி.மீ. அளவிலும் நீள் சதுரமாக மழுங்கியோ, கூர்மையாகவோ இருக்கும். மகரந்தத் தாள் கற்றைகள் (5 + 5) 4 மி.மீ. நீளமானவை. மகரந்தப் பைகள் ஒரே சீரானவை. உள்பக்கம் வளைந்திருக்கும். சூல் பை காம்புடன் கூடியது. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சூல்கள் கொண்டது. சூல்தண்டு நூல் போன்றிருக்கும்.பூக்கள் ஜனவரி - மார்ச்சு மாதங்களில் உண்டாகின்றன. கனி நீண்ட காம்பு கொண்டது. 2–10 தட்டையான, ஒரு விதை கொண்ட எளிதில் பிரிக்கக் கூடிய இணைப்புகள் கொண்டது. காய்கள் ஆண்டு முழுவதும் காணப் படும். விதைகள் ஏறத் தாழச் சிறு நீரக வடிவிலிருக்கும்.
பயன். இதன் இலைகளை ஆமணக்கெண்ணெய் விட்டு வதக்கி, வீக்கங்களுக்கு ஒற்றடமிடலாம். இச்செடி ஆண் விந்துவை அழிக்கும் இயல்புடையது. —கோ. அர்ச்சுனன்
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 14, பக். 165)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/fqrvkjcf/
தமிழ்“நெட்டி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/fqrvkjcf/APA
Oliyon Research. (2026). நெட்டி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/fqrvkjcf/MLA
"நெட்டி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/fqrvkjcf/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment