இலிங்க புராணம்
iliṅka purāṇam
வியாசர் இயற்றிய பதினெண் புராணங்களுள் ஒன்று; சிவபுராணங்கள் பத்தினுள் சிறந்து விளங்குவது; ஈசன் மகிமைகளை எடுத்துக் கூறுவது.
வியாசர் இயற்றிய பதினெண் புராணங்களுள் ஒன்று; சிவபுராணங்கள் பத்தினுள் சிறந்து விளங்குவது; ஈசன் மகிமைகளை எடுத்துக் கூறுவது. இதன் பூர்வ பாகம் நூற்றெட்டு அத்தியாயங்கள் கொண்டது; உத்தர பாகம் ஐம்பத்தைந்து அத்தியாயங்களைக் கொண்டது; பதினொராயிரம் சுலோகங்களை உடையது. இவ்வடமொழி இலிங்க புராணத்திற்கு நீலகண்டரின் மாணாக்கர் கணேசர் என்பவர் ‘சிவதோடணி’ என்னும் வியாக்கியானத்தை இயற்றினார்.
இவ்விலிங்க புராணத்தைச் சடைய வர்மன் அதிவீரராம பாண்டியர் தமிழில் மொழி பெயர்த்தார். இவர் ஆட்சிக் காலம் கி.பி. 1564 முதல் 1604 வரை. ஆகையால் இது மொழிபெயர்க்கப்பட்ட காலமும் இதுவே. இனி, இது குலசேகர வரதுங்கராம பாண்டியரால் மொழிபெயர்க்கப்பட்டது என்னும் கருத்துமுண்டு.
இந்நூல் பூர்வ காண்டம், உத்தர காண்டம் என்னும் இரு காண்டங்களையும், நூற்றைம்பத்து நான்கு அத்தியாயங்களையும், இரண்டாயிரத்து ஐந்நூற்று எண்பத்தாறு பாடல்களையும் கொண்டது; சென்னைத்தண்டையார் பேட்டையில் ஏறத்தாழ நூறாண்டுகளுக்கு முன் அச்சிடப்பட்டது. இப்பொழுது கிடைத்தற்கரியது.
இந்நூலில் சிவலிங்கத்தின் பெருமையும், பதினோர் உருத்திரர்கள், இலிங்க வடிவம், பூசை, மந்திரம், உருத்திராவதாரம், பஞ்சாட்சரி, உருத்திராட்ச மகிமை, சிவராத்திரி, பிரதோடம் முதலியன பற்றிய சிறப்பும் கூறப்பட்டுள்ளன. அரிய தோத்திரங்களும், வசிட்டபுத்திரர் சத்தி என்பவரின் சரித்திரமும் விரிவாகக் கூறப்பெற்றுள்ளன.
வடமொழியிலுள்ள இலிங்கபுராணத்தில் தண்டி என்பவரின் சிவசகசரநாமமும் மற்றொரு சகசர நாமமும் கூறப்பட்டுள்ளன.
இவ்விலிங்க புராணக் கருத்துகளை நினைவூட்டும் வகையில் திருநாவுக்கரசர் இலிங்க புராணக் குறுந்தொகை என்னும் பதிகம் பாடியுள்ளார். ச.க.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 393)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/fn7ymk5q/
தமிழ்“இலிங்க புராணம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/fn7ymk5q/APA
Oliyon Research. (2026). இலிங்க புராணம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/fn7ymk5q/MLA
"இலிங்க புராணம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/fn7ymk5q/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment