பார்ன்ஹால்ம் நோய்

pārṉhālm nōy
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
டென்மார்க்கைச் சேர்ந்த பார்ன்ஹால்ம் என்ற தீவில் அதிகம் பரவியிருந்த இந்த நோயை சில்வெஸ்டரின் 1934 இல் கண்டறிந்து விளக்கினார். ஒருவகை நோய்க் கிருமியினால் இந்நோய் உண்டாகிறது. இந்நோய்க்கிருமி பீடித்த 14 நாட்களில் நோய்க்குறிகள் தோன்றுகின்றன. நெஞ்சின் அடிப்பகுதி அல்லது அடிவயிறு அல்லது முதுகெலும்புத் தசைகளில் திடீரெனக் கடும் வலி தோன்றி, மூச்சுவிடுவது கடினமாகிறது. வலி காரணமாக, காய்ச்சலும் தோன்றுகிறது. இந்நோய் ஒரு வாரம் நீடிக்கும். இதற்குச் சிகிச்சை எதுவுமில்லை. — Bornholm disease
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 217)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/fn54b6av/

தமிழ்
“பார்ன்ஹால்ம் நோய்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fn54b6av/
APA
Oliyon Research. (2026). பார்ன்ஹால்ம் நோய். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/fn54b6av/
MLA
"பார்ன்ஹால்ம் நோய்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fn54b6av/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment