இணைய முதுகெலும்பு

iṇaiya mutukelumpu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இணையம் என்பது பிணையங்களின் பிணையம் (Network of Networks). ஒரு நாட்டிலுள்ள உள்ளுர் மற்றும் வட்டாரப் பிணையங்களை ஒருங்கிணைத்து இணையத்தில் பிணைக்கப்பட்டுள்ள இன்னொரு முதுகெலும்புப் பிணையத்துடன் தரவுகளைப் பரிமாறிக் கொள்ளும் அதிவேகப் பிணையம். வரலாற்றுப் போக்கில் பார்த்தால், இணையத்தின் முன்னோடியான என்எஸ்எஃப்நெட் (NSFNet) அமெரிக்க நாட்டின் முதுகெலும்புப் பிணையமாகத்திகழ்ந்தது. தேசிய அறிவியல் கழகம் (National Science Foundation) நடத்திவந்த அனைத்து மீத்திறன் கணினி மையங்களும் (Super Computer Centers) இந்த முதுகெலும்புப் பிணையத்தில் இணைக்கப்பட்டிருந்தன. இன்றைக்கு பல்வேறு தனியார் நிறுவனங்களும் தத்தமது முதுகெலும்புப் பிணையங்களை நடத்தி வருகின்றனர் (எ-டு) எம்சிஐ, ஸ்பிரின்ட், இந்தியாவில் விஎஸ்என்எல் மற்றும் தொலை தொடர்புத்துறை (பிஎஸ்என்எல்) முதுகெலும்புப் பிணையங்களை நிறுவியுள்ளன. — Internet backbone
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 778)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/fmzdx388/

தமிழ்
“இணைய முதுகெலும்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fmzdx388/
APA
Oliyon Research. (2026). இணைய முதுகெலும்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/fmzdx388/
MLA
"இணைய முதுகெலும்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fmzdx388/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment