அலியார்ப் புலவர், க
aliyārp pulavar, ka
கி.பி. 18–ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இசுலாமியத் தமிழ்ப் புலவர்களில் ஒருவர்.
கி.பி. 18–ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இசுலாமியத் தமிழ்ப் புலவர்களில் ஒருவர். அசன் அலிப் புலவர் என்பது இவரது வேறு பெயராகும்; படைப் போர் என முடியும் பெயரமைந்த ஐந்து நூல்களை இயற்றியுள்ளார். படைப் போர் என்பது போர் பற்றி அமையும் இசுலாமிய இலக்கிய வகைகளுள் ஒன்றாகும். இபுனி ஆண்டான் படைப் போர், இந்திராயன் படைப் போர், உச்சி படைப் போர், தாகி படைப் போர், வாடோக்கி படைப் போர் ஆகிய ஐந்தும் இவர்தம் படைப் போர் இலக்கியங்களாகும்.
இவ்வைந்து நூல்களையும் தனித்தனியாகவும் சேர்த்து ஒன்றாகவும் அச்சிட்டுள்ளனர். இந்நூல் கி.பி. 1878-ஆம் ஆண்டில் அச்சாகியுள்ளது. இவற்றில் 2950 பாடல்கள் உள்ளன. இத்தொகுப்பு ‘ஐந்து படைப் போர்’ என்னும் பெயரில் அமைந்துள்ளது.
இவை ஐந்தும் நபிகள் நாயகத்தின் வரலாற்றோடு தொடர்புடைய செய்திகளைக் கூறுவனவாகலே அமைந்துள்ளன. இவ்வைந்தும் ஒன்றற்கொன்று தொடர்பு பற்றி ஒரு நூல் போலவும் அமைந்துள்ளன என்பர். ஒரு படைப் போரினை முடிக்கும் போது அடுத்த படைப் போரின் தோற்றுவாயைக் குறிப்பிட்டுச் செல்கிறார் அலியார்ப் புலவர். இதனாலும் இத்தொகுப்பு, தொடர்ந்து செல்லும் ஒரு நூல் போலவே அமைந்துள்ளது எனக் கொள்ளலாம்.மு.த.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 1, பக். 879)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/fkmn7kq5/
தமிழ்“அலியார்ப் புலவர், க”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/fkmn7kq5/APA
Oliyon Research. (2026). அலியார்ப் புலவர், க. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/fkmn7kq5/MLA
"அலியார்ப் புலவர், க." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/fkmn7kq5/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment